என்னென்ன தேவை?
ஸ்பான்ஞ்ச் கேக் – 10" X 10",
மிகக் கெட்டியான ஐஸ்கிரீம் – 2 கப்,
முட்டையின் வெள்ளைக்கரு – ( 8 முட்டையில் இருந்து எடுத்தது),
ஒரு பேக்கிங் டிஷ் (கண்ணாடிப் பாத்திரம்) சூட்டில் உடையாத, பேக்கிங் செய்வதற்கென்றே தனியாகக் கடைகளில் விற்கிறது.
எப்படிச் செய்வது?
கேக்கை, கண்ணாடி பேக்கிங் டிஷ்ஷில் வைக்கவும். அதன் மேல் ஐஸ்கிரீமை வைக்கவும். முட்டையின் வெள்ளையை நுரைக்க அடித்து ஐஸ்கிரீமின் மேல் சிறிதளவு கூட இடைவெளி இல்லாமல் மூடிவிடவும். 200 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் 7 நிமிடம் பேக் செய்யவும். வெளியில் ்எடுத்து ஸ்லைஸ் செய்து பரிமாறவும். வெளியில் முட்டையின் வெள்ளை ஆங்காங்கே ப்ரெவுன் கலருடன் வெந்தும், உள்ளே ஐஸ்கிரீம் சிறிதளவுகூட உருமாறாமலும் இருக்கும் இந்த டெஸர்ட்டை கொடுத்து, வரும் விருந்தினரை அசத்தலாம்.