23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
1474265046 7331
அசைவ வகைகள்

காலிஃப்ளவர் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – ஒன்று
பெரிய வெங்காயம் – 4
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
முட்டை – 4
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – தாளிக்க

தாளிக்க:

சீரகம் – அரை தேக்கரண்டி
கடலை உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – 6 இதழ்
பச்சை மிளகாய் – 2


செய்முறை:

முதலில் காலிஃப்ளவரை 5 நிமிடம் கொதிக்க வைத்த நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் பொடியாக நறிக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் காலிஃப்ளவரை போட்டு பிரட்டவும். பின் மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி சிறிது நேரம் அப்படியே பிரட்டி விடாமல் வேகவைத்து பிறகு கலக்கவும். வெந்ததும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் ரெடி. தேவைப்பட்டால் மிளகுத் தூள் சேர்த்தும் இறக்கலாம்.1474265046 7331

Related posts

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan

சூப்பரான மட்டன் குடல் குழம்பு

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan

கிராமத்து கோழி குழம்பு

nathan

மொறு மொறுவென்ற கோழி நக்கட்ஸ்

nathan

சோயா இறைச்சி பொரியல்

nathan

நாட்டுக்கோழி மசாலா

nathan

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

nathan

முட்டை குருமா

nathan