23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
17 1476702097 3 conditioner
தலைமுடி சிகிச்சை

தலைக்கு குளிக்க நேரமில்லையா? உங்க தலை கப்பு அடிக்குதா? இதோ சில டிப்ஸ்…

மாசுக்கள் நிறைந்த இன்றைய மோசமான சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்க்கின்றன. இதனால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய நிலையில் இருப்போம். ஆனால் தினமும் தலைக்கு குளித்தால், தலைமுடி உதிரும் என்பதால், பலரும் தலைக்கு குளிக்க முடியாமல் தவிப்பார்கள். அதே சமயம் தலையில் இருந்து துர்நாற்றம் வீசும்.

இப்படி தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க தீர்வே இல்லையா என்று பலரும் தேடுவார்கள். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு தலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பெர்ஃப்யூம்
உங்களிடம் இருக்கும் பெர்ஃப்யூமை தலை சீவுவதற்கு முன் தலையில் சிறிது அடித்துக் கொண்டு, பின் சீப்பு கொண்டு தலைமுடியை சீவினால், தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.

பூ
உங்களுக்கு நல்ல மணம் நிறைந்த பூக்களின் வாசனை வேண்டுமானால், தலைக்கு பூ வைத்துக் கொள்ளுங்கள். இதனால் தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.

கண்டிஷனர் இரவில் படுக்கும் முன் லீவ்-ஆன் கண்டிஷனரைத் தடவுங்கள். இதனால் மறுநாள் எழும் போது, தலைமுடி மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நீரை நிரப்பி, அத்துடன் சிறிது நறுமணமிக்க லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெயைக் கலந்து, வெளியே செல்லும் முன் தலையில் ஸ்ப்ரே செய்து கொண்டு, பின் தலையை சீவிக் கொள்ளுங்கள்.

சீரம் நறுமணமிக்க தலைமுடிப் பராமரிப்புப் பொருளான சீரத்தைப் பயன்படுத்தலாம். இந்த சீரத்தை தலைமுடியில் தடவிக் கொண்டால், தலைமுடி நாற்றமடிப்பது தடுக்கப்படும்.

17 1476702097 3 conditioner

Related posts

நீங்கள் தூங்கும்போது செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் கூந்தல் உதிர்விற்கு காரணம்!!

nathan

கூந்தல்: பொடுகுப் பிரச்னை

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா? பாண் பயன்படுத்துங்கள் பெண்களே.

nathan

சூப்பர் டிப்ஸ் பொடுகு தொல்லையை எளிமையாக இயற்கை முறையில் போக்கும் வழிகள்

nathan

கட்டுக்கடங்காமல் முடி வளர்வதற்கு 1 ஸ்பூன் கிராம்பு போதும்.தெரிந்துகொள்வோமா?

nathan

படுக்கும் முன் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்

nathan

வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி?

nathan

கலர் செய்த கூந்தலை பராமரிக்க உதவும் மூன்று சிறந்த வழி!…

nathan

கலரிங் செய்யப்பட்ட முடியில் பளபளப்புத்தன்மையை நீடிக்கச் செய்வது எப்படி?…

nathan