சருமம் பிறந்ததிலிருந்து ஒரே மாதிரி இருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் பலவித சூழ் நிலைகளாலும் வெயிலாலும், மாசினாலும், நிறமிழந்து கருமைடைந்து மங்கி பொலிவின்றி இருக்கும்.
சருமம் ஆரோக்கியத்தின் முகவரியும் கூட. மென்மையான பளிச்சென்ற சருமம் அழகு மட்டுமல்ல ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. நிறம் பொருட்டு இல்லை இங்கே.
உங்களின் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்க பாதாம் எப்படி உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.
பாதாம் மற்றும் பால் : பாதாம் இரவே ஊற வைத்துவிடுங்கள். மறு நாள் பாலுடன் அரைத்து முகத்தில் போடவும். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் இழந்த நிறம் பெறலாம்.
பாதாம் மற்றும் தேன் : பாதாம் பொடியுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.
பாதாம் மற்றும் பப்பாளி : இரண்டுமே இறந்த செல்களை வெளியேற்றும் அத்னால் உண்டான கருமை படிப்படியாக மறையும். பாதாம் பொடியுடன் பப்பாளியை கலந்து முகத்தில் போடுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் தரும். முக்கியமாக எண்னெய் சருமம் உள்ளவர்கள் இதனை கடைபிடிக்கவும்.
பாதாம் மற்றும் ஓட்ஸ் : பாதாம் பொடி மற்றும் ஓட்ஸ் பொடி ஆகிய்வற்றை சம அளவு கலந்து யோகார்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகத்தின் நிறம் உடனடியாக அதிகரிப்பதை பார்ப்பீர்கள்.
பாதாம் மற்றும் வாழைப்பழம் : வாழைப்பழம் சருமத்தை இருதுவாக்கி பளபளப்பை தரும். பாதாம் பொடியுடன் மசித்த வாழைப்பழத்தை கலந்து முகத்தில் போடுங்கள். சருமம் உயிர்ப்புடனும் நிறம் பெற்றும் இருக்கும்.