என்னென்ன தேவை?
முதல் கலவை – படா சேவ் செய்ய…
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 1/4 கப், ஓமம், பெருங்காயத் தூள், உடைத்த மிளகு, முழு தனியா – தலா 1/4 டீஸ்பூன்,
வனஸ்பதி – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
சோடா உப்பு – ஒரு சிட்டிகை,
தயிர் – 2 டீஸ்பூன்.
2வது கலவை…
கடலை மாவு – 2 கப்,
அரிசி மாவு – 1/2 கப்,
ஓமம் -1/2 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,
வனஸ்பதி – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு,
இரண்டிற்கும் பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
முதல் கலவை மாவில் வனஸ்பதி சேர்த்து பிசையவும். அது ரொட்டித்தூள் போல் வரும்பொழுது, அதில் முதல் மாவிற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து சிறிது நேரம் மூடி வைத்து பின் சிறு சிறு கோலிகளாக எடுத்து கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, விரல் மாதிரி நீட்டமாக செய்து எண்ணெயை காய வைத்து இந்த முறுக்கை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 2வது கலவை பொருட்கள் அனைத்தையும் கலந்து தேவையான தண்ணீர் தெளித்து ஓமப்பொடி பதத்திற்கு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் முதல் பொரித்த எண்ணெயில் ஓமப்பொடியாக பிழிந்து எடுத்து, முதல் சேவையுடன் கலந்து ஸ்டோர் செய்யவும்.