நம் முகம் ‘பளிச்’ சென்று இருக்க இயற்கையான முறையில் ‘பிளிச்சிங்’ செய்யும் முறையை பார்த்தோம். இந்த முறை இயற்கையான முறையில் ‘பேஷியல்’ செய்வதை பார்ப்போம்.
இந்த பேஷியல் முறைகள் வறண்ட சருமத்தை மென்மையாகவும், அதீத பொலிவுடனும் வைக்கும். பியூட்டி பார்லர்களுக்கு போகாமலே வீட்டிலேயே நம் விருப்பம் போல செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து இரு வாரங்களுக்கு செய்து வந்தால் நம் சருமம் மாறுவது நமக்கு நன்கு தெரியும்.
* மஞ்சள் ஃபேஷியல்
மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய்,எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை அகற்றி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்கள் சருமம் பளபளக்கும்.
* தேன் ஃபேஷியல்
ஒரு ஸ்பூன் பால் பவுடர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்கள் சருமம் பட்டுபோல மிருதுவாக மாறும்.
* ஓட்ஸ் ஃபேஷியல்
தேவையான அளவு ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சருமம் வெண்மை நிறமாக மாறும்.
* பாதாம் ஃபேஷியல்
பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி வர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.