வேலைக்கு செல்பவர்கள் மிகவும் எளிதாகவும், சுவையுடனும் சமைத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்ல கொண்டைக்கடலை புலாவ் சூப்பராக இருக்கும்.
சுவையான கொண்டைக்கடலை புலாவ்
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 6
கிராம்பு – 5
பட்டை – 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் – 1
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* கொண்டைக்கடலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கவும்.
* மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, சீரகம், மிளகு, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்றாக வதக்க வேண்டும்.
* பிறகு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கிய பின் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்தாக வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அனைத்தும் நன்கு வதங்கியதும், கழுவிய அரிசியை சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* இப்போது சுவையான கொண்டைக்கடலை புலாவ் ரெடி!!!