என்னென்ன தேவை?
ரவை – 250 கிராம்,
சர்க்கரை – 1 அல்லது 11/2 கப்,
முழு தேங்காய் – துருவியது,
உப்பு – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
நெய் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் கலந்து, சின்னச் சின்ன கிண்ணத்தில் நெய் தடவி, புட்டு மாவை முக்கால் பாகமாக போட்டு இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். சூடான புட்டை வாழைப்பழத்துடன் பரிமாறவும். குறிப்பு: தேங்காய் அதிகம் சேர்ப்பதால் இது தேங்காய்ப் புட்டு. புட்டு வேகவைக்கும் குழாயிலிலும் செய்யலாம்.