கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் மட்டும் தான் முகப்பருக்களை உண்டாக்கும் என்பதில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும்.
இந்த ஆரோக்கிய உணவுகளும் முகப்பருவை உண்டாக்கும்
சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக வரும். அதுவும் ஒருசில ஆரோக்கிய உணவுகளை உட்கொண்ட பின்பு, இன்னும் அதிகமாக வரும். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகளால் தான் அந்த பருக்கள் வருகிறது என்று நம்மில் பலருக்கும் தெரியாது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உணவுகளை சாப்பிட்டால் முகப்பருக்கள் வரும். உங்களுக்கு ஏற்கனவே பிம்பிள் இருந்தால், அந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
கொழுப்பு நீக்கிய பாலைக் குடித்தால், பருக்கள் வராது என்று நினைக்காதீர்கள். இந்த பாலை தினமும் அளவுக்கு அதிகமாக ஒருவர் குடித்து வந்தால், அப்பாலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் உட்பொருட்கள், பிம்பிளை உண்டாக்கும்.
ஸ்மூத்திகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், பழங்களில் உள்ள ஃபுருக்டோஸ் முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஸ்மூத்திகளை அதிகம் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.
சோயாபீன் எண்ணெயில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் மற்றும் ஒமேகா-6 அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. ஆகவே இந்த எண்ணெயை முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும்.
கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் மட்டும் தான் முகப்பருக்களை உண்டாக்கும் என்பதில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும். குறிப்பாக கொழுப்பு குறைவான தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, அந்த சர்க்கரை கொலாஜன் இழைகளைப் பாதிப்பதோடு, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்க முடியாமலும் செய்யும்.