24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
nattukozhi varuval 13 1471089203 1
அசைவ வகைகள்

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும்.

இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி – 2 சோம்பு பொடி – 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் கிராம்பு – 2 பட்டை – 2 ஏலக்காய் – 2 மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு குழம்பு மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு பொடி சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள சிக்கனை மட்டும் சேர்த்து, குழம்பு மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு மசாலா கோழியுடன் ஒன்று சேர பிரட்டி விட வேண்டும். ஒருவேளை அடிப்பிடிப்பது போல் இருந்தால், அதோடு சிறிது சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெடி!!!

nattukozhi varuval 13 1471089203

Related posts

சிக்கன் கோழி பிரியாணி

nathan

ஆட்டுக்கால் பாயா செய்ய வேண்டுமா?….

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

முட்டை குருமா

nathan

சுவையான மஸ்ரூம் பெப்பர் ப்ரை

nathan

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

nathan

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

nathan