29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701231508517344 raw banana pepper roast SECVPF
சைவம்

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்

வாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். இப்போது காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்
தேவையான பொருட்கள் :

வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 5
மிளகு – 3 டீஸ்பூன்

செய்முறை :

* வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

* வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

* வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

* பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!201701231508517344 raw banana pepper roast SECVPF

Related posts

சுரைக்காய் பால் கூட்டு

nathan

சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா

nathan

சிம்பிளான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

கப்பக்கறி

nathan

மஷ்ரூம் ரெட் கறி

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

கார்லிக் பனீர்

nathan

வாங்கி பாத்

nathan

கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்

nathan