25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்.

tamil  beautytips face

க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும் பல திரையுலக நட்சத்திரங்களின் அழகின் இரகசியம் என்னவாக இருக்குமென்றால் அது க்ரீன் டீயாகத் தான் இருக்க முடியும். பலரிடம் க்ரீன் டீயைப் பற்றி கேட்டால் அனைவரும் சொல்வது, “க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்லாமல், முகம் பொலிவாக இருக்கும்” என்பது தான்.

ஆனால் க்ரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த க்ரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், என்ன மாதிரியான அழகு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

இளமை தோற்றம்
க்ரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு க்ரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.

பருக்கள்
பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே க்ரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

சரும பாதுகாப்பு
க்ரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமின், இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.

அழகான சருமம்
எப்போது சருமத்தில் டாக்ஸின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்ஸின்களை முற்றிலும் போக்கும் திறன் க்ரீன் டீயின் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் க்ரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

சரும புற்றுநோய்
சருமத்தின் மீது அதிகப்படியான சூரியனின் புறஊதாக்கதிர்கள் பட்டால், சில சமயங்களில் சரும செல்கள் பாதிப்படைந்து, சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அத்தகைய தாக்கத்தை தடுத்து, சருமத்திற்கு சரியான பாதுகாப்பை க்ரீன் டீ கொடுக்கும்.

எடை குறைவு
க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, செரிமானப் பிரச்சனையை சரிசெய்யும். அதாவது, க்ரீன் டீ, உண்ணும் உணவை சரியாக செரிமானமடைய வைத்து, சாப்பிட வேண்டிய நேரத்தில் மட்டும் சாப்பிட வைக்கும். இதனால் தான் க்ரீன் டீ குடித்தால், உடல் சிக்கென்று ஸ்லிம்மாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

முடி உதிர்தல்
நீண்ட நாள் பிரச்சனை என்றால் அது முடி கொட்டுவது தான். இத்தகைய பிரச்சனைக்கு க்ரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் க்ரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் தடுக்கும்.

Related posts

அட கழுத்துல 2 தாலி… முதல் கணவனிடம் சிக்கிய மனைவி

nathan

வரம்பு மீறு ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..அம்மா பேரை சுத்தமாக கெடுக்கும் மகள்!

nathan

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் மீரா மிதுனின் மீது புகார் கொடுத்துள்ள ரவீந்திரன்!

nathan

கழுத்தில் கருவளையம்

nathan

அற்புதமான அழகு குறிப்புகள்…!!

nathan

திருமணத்தின் போது ஆண்கள் முக்கியமாக செய்ய வேண்டியவை….

sangika

எண்ணெய் பசை சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி?

nathan

இதை தினமும் செய்து வந்தால் உங்கள் கன்னங்கள் அழகாக கவர்ச்சியாக காட்சியளிக்கும்.

nathan

40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…! ~ பெட்டகம்

nathan