24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201701181247258778 bajra Vegetable chapati SECVPF 1
சைவம்

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கம்பு, வெஜிடபிள் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இப்போது கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி
தேவையான பொருள்கள் :

கம்பு மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 கொத்து
முட்டை கோஸ் – 100 கிராம்
கேரட் – 2
உருளைக்கிழங்கு – 1
கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பால் – அரை கப்

செய்முறை :

* முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கை, கேரட் துருவிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை போட்டு அதில் உப்பு, துருவிய காய்கறிகள், கரம்மசாலா தூள், பால், ப.மிளகாய், போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

* பிரைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுங்கள்.

* ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.201701181247258778 bajra Vegetable chapati SECVPF

Related posts

அப்பளக் கறி

nathan

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

nathan

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

nathan

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

nathan

சூப்பரான வெந்தய மசாலா சாதம்

nathan

உருளைக்கிழங்கு வரமிளகாய் வறுவல்

nathan

பட்டாணி புலாவ்

nathan

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் சப்பாத்தி

nathan