27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
தையல்தையல் டிப்ஸ்கள்

தையல் கலையும் அதன் நுட்பங்களும்

1sewing-machineதையல் இயந்திரம் பற்றிய சில விளக்கங்கள்:

எலக்ட்ரானிக் தையல் மெஷின்:
எலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பற்பல வேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன.

எந்த ஒரு தையல் மெஷினிலும் அடிப்படைத் தேவை என்னவென்றால், அதன் நூல் மேலும் கீழும் ஏறி இறங்கி தையல் போடும் வகையில் ஊசியும், ஷட்டிலும் துல்லியமான நேரப்படி இயங்கவேண்டும். மெஷின் பிரஷர் ஃபுட் துணியை உரிய இடத்தில் வைத்து, முன்புறம் நகர்த்தி, ஷீம்மை உருவாக்குகிறது.

லாக் தையல் மெஷின்:
உலகெங்கும்  அதிக அளவில் ஒற்றை ஊசி லாக் தையல் மெசின்தான் பயன்படுத்தப்படுகிறது.சங்கிலித் தையல் மெஷின்களும், ஒவர் எட்ஜ் தையல் மெஷின்களும் பொதுவாக பின்னல் வேலைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

தையல் மெஷினை எவ்வாறு இயக்குவது என்ற அடிப்படைத் தவகல்களை தெரிந்து கொண்டால், எந்த தையல் மெஷினையும் சரியான முறையில் பயன்படுத்தி, தையல் கோளாறுகளை சரிசெய்ய முடியும்.சாதாரண லாக் தையல் மெஷினை தட்டை படுகை தையல் மெஷின் என்றும் சொல்கிறார்கள். அது நேராக மட்டுமே தையல் போடுகிறது.

லாக் தையல்:
இருபுறங்களில் இருந்தும் தையல் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. மிகவும் தட்டையாக முற்றிலும் பாதுகாப்பானதாக, அவ்வளவாக வெளியில் தெரியாமல் தையல் இருக்கிறது. உடையைப் பயன்படுத்தும்போது நூல் அறுந்தால் கூட தையல் பிரிவதில்லை. ஏனென்றால், இரண்டு நூல்களும் ஒன்றுடன் ஒன்று (இறுக்கமாக பிணைந்து) லாக் ஆகியுள்ளன.

எனவேதான் இத்தகைய தையல் லாக் தையல் என்று அழைக்கப் படுகிறது. மேலே உள்ள ஸ்பூலில் இருந்து வெளிப்படும் ஊசிநூலும், கீழே உள்ள பாபினில் இருந்து வெளிப்படும் பாபின் நூலும் பிணைந்து லாக் தையல் விழுகிறது.

சரியாக தையல் விழும்போது, மேலிருந்தும் கீழிருந்தும் சமமான அளவுக்கு நூல் பயன்படுத்தப்படுகிறது. துணியின் மத்தியில் நூல்கள் லாக் ஆகின்றன.

லாக் தையல் மெஷின் வகைகள்:
இரண்டு வகையான லாக் ஸ்டிட்ச் மெஷின்கள் உள்ளன. அவைகள், ஒன்று சாதாரண தையல் மெஷின், காலால் இயக்க கூடியது. மற்றொண்டு லாக் ஸ்டிட்ச் பவர் தையல் மெஷின் என்பது. சாதாரண கறுப்புக் கலர் லாக் ஸ்டிட்ச் (பழைய)தையல் மெஷினிற்கும், பவர் மெஷினான வெள்ளைக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன.

அவைகள்:
1. வெள்ளை நிற பவர் தையல் மெஷின் மிகவும் விரைவானது. அது சராசரியாக ஒரு நிமிடத்தில் 5000 தையல்கள் போடுகிறது. ஆனால், சராசரி கறுப்பு நிற சாதாரண தையல் மெஷினோ 800 தையல்களுக்கு மேல் போடுவதில்லை. அதேவேளையில் கைத்தையல் மெஷின் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 300 தையல்கள் மட்டும் தான் போடுகிறது.

2. பவர் தையல் மெஷினில், நீடில் லிஃப்ட் மூலம் (Presser Foot) பிரஷர் ஃபுட் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆனால், சாதாரண கறுப்பு நிற வீட்டுத்தையல் மெஷினில், நீடில் பாருக்குப் பின்னால் உள்ள ஒரு (Presser Foot Lifter) லீவரைப் பயன்படுத்தி இது கையால் இயக்கப்படுகிறது.

3. சாதாரண தையல் மெஷினில் உள்ள (Throat Plate) த்ரோட் பிளேட், ஷீம் கைடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இது தொழிற்சாலை தையல் மெஷினில் இருப்பதில்லை .

4. பவர் மெஷினில் (Presser Foot) பிரஷர் ஃபுட்டுக்கு இரண்டு பெரு விரல்களுக்கு இடையே குறுகலான திறப்புதான் உள்ளது. இது துணியை உறுதியாகவும், இறுக்கவும் பற்றுகிறது.

5. பவர் மெஷினில் உள்ள பிளேட்டில் உள்ள (Throat Plate) த்ரோட் பிளேட்டில் சிறிய உருண்டையான ஊசித்துளை உள்ளது. சாதாரண தையல் மெஷினில் இது பெரிதாகவும் ஓவல் வடிவிலும் உள்ளது. இதனால் தையல் பிரச்சனைகள் குறைகின்றன.

சாதாரன தையல் மெஷினின் பாகங்கள்:

கருப்பு தலை மெஷின்:
தையல் கலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், பவர் தையல் மெஷினின் வெவ்வேறு பாகங்களைப்   பற்றிப்  புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

1 .ஹான்ட் வீல்: மெஷினின் வலது புறத்தில்  ஹேன்ட் வீல் உள்ளது.  சாதாரண தையல் மெஷின். இது கையால் அல்லது பெல்ட்டால் சுழற்றப்படுகிறது. பவர் தையல் மெஷினில் இது பெல்ட்டினால் இயங்குகிறது. தையல் இயந்திரத்தில் நீடில் பாரின் இயக்கத்தை இது கட்டுப்படுத்தி, மெஷினை சீராக ஓட்டுகிறது.

2 . இயக்கம் நிறுத்தம் ரவுன்ட்: இது மெஷினின் வலது ஓரத்தில் சுற்றுர்ம சக்கரத்தை ஒட்டி அமந்திருக்கும். இந்த  ஸ்குருவை இறுக்கமாக (இடமிருந்து வலமாக) மூடினால்  சக்கரம் சுற்றி மெஷின் தைப்பதற்கு உதவுகிறது. இதை வலமிருந்து இடமாக திருகி தளர்த்தினால் சக்கரம் சுற்றும் .ஆனால் தைக்க முடியாது ; நூல் சுற்றலாம் , இப்படியாக இந்த ஸ்குருவை  தளர்த்தியும் , தைக்கும் போது இறுக்கமாக மூடியும் தையல் இயந்திரத்தை இயக்கலாம்.

3 . பிரஷர் புட் (Presser Foot): தைக்கும் போது துணியை (Feed Dogs) பீட் டாக் உடன் இணைந்து பற்றிக்கொள்வதுடன் நேராக தைப்பதற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.  இதைக் கழற்றி தேவைக் ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளலாம். வெவ்வேறு வேலைகளுக்கு ஜிப்பர்  புட் , பிளாஸ்டிக் புட்  என்று வெவ்வேறு வகை (Foot) புட்கள் உள்ளன.

4 . பிரஷர் புட் லிப்ட்டர் (Presser Foot Lifter): மேலும் கீழும் தூங்குவதற்காக பிரஷர் புட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு லீவர். துணியைத் தைப்பதற்கு தொடங்கும்போது பிரஷர் புட் லிப்ரரைத் தூக்குவதன் மூலம் “பிரசர் புட்”  மேலெழும். அதன் போது நீடில் பிளெட்டிற்கும் பிரசர் பூட்டிற்கும் இடையில் துணி வைக்கக் கூடியதாக இடைவெளி ஏற்படுகின்றது.

5  நீடில் பிளேட்: இது ஒரு அரை வட்டத்  தட்டு , இதில் உள்ள துளை வழியாக நூல் கடந்து செல்கிறது . தையலின் போது வழிகாட்டியாக செயல்படுகிறது.

6 . நூல் இறுக்கி (டென்ஷன் யூனிட்): மேல்  நூலின் இறுக்கத்தையும் , தையல்களின் தரத்தையும் கட்டுப்படுத்தும்  ஒரு அமைப்பு .
நூல்ப் பந்தில் இருந்து வரும் நூலானது நூல் தொய்வடையாது இருப்பதற்காக அதற்கென அமைக்கப்பெற்ற நூல் (கைடு)தாங்கிகள் ஊடாகவந்து இந்த நூல் ரென்ஷன் யூனிற்றில் இடையே உள்ள இரண்டு டிஸ்க்குகளுக்கு இடையில் செல்கின்றது. அதன் பின் நூலானது திரேட் டேக் அப் லிவர் ஊடாக ஊசிக்கு செல்கின்றது.
டிஸ்க் இரண்டிற்கும் இடையில் உள்ள பிரஷரை கட்டுப்படுத்த ஸ்பிரிங் மற்றும் நட் உதவியால் நூலின் இறுக்கம் சரி செய்யப் படுகிறது.

7 . நூல் இழுக்கும் (திரேட் டேக் அப்) லீவர் (Thread Take-up Liver): இது ஒரு முக்கியமான பாகம். இது தைக்கும்போது மேலும் கீழும் ஆடிக்கொண்டிருக்கும். இதன் வழியாக நூலைக் கோர்த்து தைக்கும் போது நூலானது, நூல் டென்ஷன் யூனிடில் இருந்து நூலை இழுத்து எடுப்பதுடன் ஊசியில் உள்ள நூலும் அளவான ரென்சனுடன் கீழ் நூலை பிணைத்து இழுக்க உதவுகின்றது.

நூலின் ரென்சன் கூடினால், தையலின் பிணைப்பு மேற்பக்கமாகவும், குறைந்தால் கீழ்ப்பக்கமாகவும் தெரியும். இது சரியான தையல் அல்ல.

பொவினில் இருந்து வரும் நூலும் குறிக்கப்பெற்ற இறுக்கத்துடன் மேலிருந்து வரும் நூலுடன் பிணைய வேண்டும். அப்போதுதான் தையல் ஒழுங்காக இருக்கும். கீழ் நூலை இறுக்குவதற்காக பொவின் வைக்கும் சட்டிலில் வெளிப்பக்கமாக பொருத்தப்பெற்றுள்ள தகட்டிற்கு இடையில் பொவினில் இருந்து வரும் நூலை மாட்டி எடுக்கப் படுகின்றது. சட்டிலில் இருந்து வரும் நூல் இறுக்கமாக அல்லது லூசாக இருந்தால் (வெளித் தட்டை அமத்தி சட்டிலுடன் பூட்டி இருக்கும்) ஸ்குறூவை திருப்புவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம்..

8. பீட் டாக் (Feed Dogs): பிரஷர் புட்டுக்கு கீழே உள்ள சிறிய உலோக சாதனம். இதில்  உள்ள பல் தைக்கப்படும்போது துணியை தையலின் அளவுக்கு தக்கதாக இழுத்து செல்கிறது . ஒவ்வொரு தையல் முடிந்ததும் இது ஒரு தையல் அளவுக்கு துணியை முன்னோக்கி நகர்த்துகிறது.

09 . நூல் கைடு (நூல் கொழுவி): நூல் தொவடைந்து சிக்குப்படாது இருக்க இதனூடு நூலை விடுதல் வேண்டும்.

தையல் டிப்ஸ்கள்
1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.

2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.

3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.
4. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.

5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.

6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.

7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.

8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே (பெரிதாக்கக் கூடியதாக ) பிரித்து பயன் படுத்தக் கூடியதாக துணி விட்டு தைக்கவும்.

9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.

10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது.

11. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நல்ல உதரி போட வேண்டும்.

12. நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.

பிளவுஸ் தைக்கும் போது
1. பிளவுஸ் தைக்கும் போது இடுப்பு பட்டிக்கு உள் பக்கம் கேர்ன் வாஸ் துணி கொடுத்து தைத்தால் நல்ல ஸ்டிஃப்பாக இருக்கும் அல்லது பிள்ளைகளின் ஸ்கூல் காட்டன் பேண்ட் துணியும் வைத்து தைக்கலாம்.

2.எப்போதும் கலர் துணியை உள்ளே வைத்து தைக்ககூடாது, அது குண்டாக இருப்பவர்களுக்கு மடங்கும் போது வெளியே தெரியும்.

துணிகளை வெட்டும் போது
துணிகளை வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி ஒரு பையில்வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.

யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.
இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.
நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.
உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கு,
நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கு.

துணி வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டதா?
1.பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டால் கவலை பட தேவையில்லை, அதே போல் அரை இன்சுக்கு கழுத்து வரைந்து ஒட்டு கொடுத்து விட்டு ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ், அல்லது மணி, இல்லை ஜரிகை லேஸ் வைத்து தைத்து கொள்ளலாம் என்ன சல்வாரோ அத்ற்கு ஏற்றார் போல்.

2.அதே போல் சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து , சைட் பகுதி, கையில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.

3.இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை வொர்க் வந்தது தான், மைசூர் சில்க் போன்றவை தான் கட்டு கிறார்கள்.
அப்ப பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.

Related posts

சூப்பர் லெக்கிங்ஸ்

nathan

How to sew wrap dress | Wrap dress/Easy Way Step by Step Method -ஆடை தையல் பயிற்சி

nathan

டி-ஷர்ட் பெய்ன்டிங்

nathan

ரவிக்கை(blouse) வெட்டுதல் மற்றும் தைத்தல்

nathan

சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி?

nathan

ஆரி ஒர்க்

nathan

அளவெடுத்து வெட்டும் முறை Blouse

nathan

ழந்­தை­க­ளுக்­கான படுக்கை விரிப்­பு (Cot Sheet)

nathan

Chain Stitch

nathan