28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
tawa mushroom 19 1468932404 1
சைவம்

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

சப்பாத்திக்கு எப்போதும் மசாலா, கிரேவி என்று செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களான காளான் மற்றும் குடைமிளகாயை வைத்து ஒரு சைடு டிஷ் தயாரித்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும்.

இந்த ரெசிபியின் பெயர் தவா மஸ்ரூம். இது பேச்சுலர்கள் எளிதில் சமைத்து சாப்பிடும் அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த தவா மஸ்ரூம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: மஸ்ரூம்/காளான் – 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1/4 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு… எண்ணெய் – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக 2 நிமிடம் வதக்கவும். அதற்குள் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் அந்த அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போக நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி, காளானை சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கிளறி விட்டு, காளான் மசாலாவை நன்கு உறிஞ்சும் படி வேக வைக்க வேண்டும். பிறகு குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி!!!

tawa mushroom 19 1468932404

Related posts

தயிர்சாதம்

nathan

சிம்பிளான… டிபன் சாம்பார்

nathan

சத்தான பட்டர் பீன்ஸ் – கேரட் பொரியல்

nathan

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

சுவையான பன்னீர் குருமா செய்வது எப்படி

nathan

சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

பீட்ரூட் ரைஸ்

nathan