27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
201701171203335733 Lemon juice can alleviate digestive problems SECVPF 2
பழரச வகைகள்

செரிமானப் பிரச்சனையை போக்கும் எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை குடிக்கும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

செரிமானப் பிரச்சனையை போக்கும் எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

நம் உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.

நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை குடிக்கும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

காபி குடிப்பதால் அவ்வப்போது ருசியும் மணமும் கிடைத்து வந்தாலும், அது நரம்பு மண்டலத்தையும் செரிமானத்தையும் பாதிக்கக் கூடியது. ஆனால், எலுமிச்சையின் பலனை அறிந்து, எலுமிச்சை ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காபிக்கு விரைவில் தலைமுழுகி விடலாம்.201701171203335733 Lemon juice can alleviate digestive problems SECVPF

Related posts

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan

சூப்பரான குளு குளு கிரீன் ஆப்பிள் லஸ்ஸி

nathan

சுவையான வாழைப்பழ கீர் வீட்டிலேயே செய்யலாம்……

sangika

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

குளுகுளு ஆப்பிள் சோடா செய்வது எப்படி

nathan

செம்பருத்தி பூ சர்பத்

nathan