மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். மட்டன் கீமா புலாவை எப்படி வீட்டில் எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
சூப்பரான மட்டன் கீமா புலாவ்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 2 கப்
மட்டன் கொத்துக்கறி – 400 கிராம்
தயிர் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 6
ஏலக்காய் – 5
மிளகு – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
காய்ந்த திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டன் கொத்துகறியை சுத்தம் செய்து வைக்கவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* குக்கரில் நெய் விட்டு சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு கறியை வேக விடவும்.
* பிரஷர் போனதும் குக்கரை திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.
* மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.
* இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.