26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
பழரச வகைகள்

காபி மூஸ்

என்னென்ன தேவை?

பால் – 2 கப்,
கோகோபவுடர் – 4-5 டீஸ்பூன்,
குக்கிங் சாக்லெட் துருவியது – 1/2 கப்,
சைனா கிராஸ் -5 கிராம்,
கஸ்டர்ட் பவுடர் – 1 டீஸ்பூன்,
கிரீம் – 100 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அகர் அகர் எனப்படும் சைனா கிராஸை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 1/2 கப் பால் எடுத்து அதில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலைச் சூடாக்கி அதில் சர்க்கரை, சிறிது பாலுடன் கலக்கிய கோகோவை சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்த சைனா கிராஸை அடுப்பில் வைத்து நன்றாகக் கரைந்து கொதி வந்தபின், அதைப் பாலுடன் சேர்க்கவும்.

இப்போது பால், சர்க்கரை, கஸ்டர்ட் பவுடர் கலந்த பால், கோகோ, அகர் அகர் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் ஏற்றி நன்றாகக் கலந்து, கொதி வந்து கெட்டியான பின் கீழே இறக்கி வைத்து (கட்டியில்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்) ஆறிய பின் கெட்டியாக அடிக்கப்பட்ட கிரீம், எசென்ஸ் சேர்த்து, தனித்தனி கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றி செட் செய்து 2 மணி நேரம் கழித்து சாக்லெட் துருவல், கிரீம் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: கிரீம் கெட்டியாக இருந்தால், சிறிதளவு குளிர்ந்த பாலுடன் சேர்த்துக் கலந்து பின் ஒரு தடவை அடித்துப் பின் அகர் அகர் கலவையில் சேர்க்கவும். கிரீம் பால் போல் இருந்தால் ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்து கெட்டியான பிறகு, குளிர்ந்த பால் சேர்த்து அடித்துப் பிறகு புட்டிங்கில் சேர்க்கவும்.[img]http://i.imgur.com/ZZMWtqa.jpg/img]

Related posts

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan

சுவையான லிச்சி அன்னாசி ஸ்மூத்தி

nathan

ஃபலூடா

nathan

ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

nathan

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்

nathan

கோடை வெப்பத்தை விரட்டும் குளு குளு பானங்கள் செய்வது எவ்வாறு

nathan

தேசிக்காய் தண்ணி

nathan

வெயிலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி – லெமன் ஜூஸ்

nathan

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan