29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1484480369 7618
சிற்றுண்டி வகைகள்

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
தண்ணீர் – 3.5 கப்
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
நெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
முந்திரி – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
இஞ்சி – ஒரு சிறு துண்டு(பொடியாக)
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி பாசிப் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த வெப்பத்தில் வறுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வேக விடவும்.

பருப்பு வெந்த பின் வறுத்து வைத்த ரவை சேர்த்து அத்துடன் உப்பு போட்டு வேக விடவும். ஒரு கடாயில் நெய் சேர்க்கவும். பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நிமிடங்கள் அவற்றை வறுத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி(தாளித்து) பொங்கலில் அதை சேர்த்து கிளறி பரிமாறலாம். சுவையான ரவை பொங்கல் தயார்.1484480369 7618

Related posts

மெது போண்டா செய்வது எப்படி

nathan

இஞ்சித் துவையல் வகைகள்!

nathan

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

வாழைப்பூ வடை செய்வது எப்படி Vazhaipoo-vadai.

nathan

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

nathan

உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்

nathan

வெஜிடபிள் பாட் பை

nathan

தயிர் மசாலா இட்லி

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி

nathan