29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 1474540707 neemmask
தலைமுடி சிகிச்சை

பொடுகை விரட்டும் வேப்பிலை நீர் எப்படி தயாரிப்பது?

பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். சீவும்போது கொட்டும். பொடுகினால் முகப்பருக்கள் அதிகமாகும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும்.

பொடுகைப் பற்றி நீங்கள் பெரியதாய் அப்போதைக்கு கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அது பின்னாளில் உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை தாக்கி பலமிழக்கச் செய்யும். இதன் விளைவு எப்போதும் முடி மெலிதாய் பார்ப்பதற்கு அசிங்கமாய் காட்சி அளிக்கும்.

எனவே பொடுகிற்கு இப்போதே முடிவு கட்டுங்கள். பொடுகு தொல்லை எப்படி போக்குவது என யோசித்தால் உங்கள் யோசனைக்கு இங்கே பதில் வேப்பிலை. ஆமாம் வேப்பிலையால் பொடுகை ஓட விரட்டமுடியும். எப்படி என பார்க்கலாம்.

வேப்பிலை நீர் : தேவையானவை : வேப்பிலை – 2 கைப்பிடி நீர் – 1 லிட்டர் தேன் – 1 ஸ்பூன்

செய்முறை : நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் 2 கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.

மறு நாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கக்ள். 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடு தூர ஓடிடும்.

வேப்பிலை மாஸ்க் : தேவையானவை : வேப்பிலை – 2 கைப்பிடி வெந்தயம் -2 ஸ்பூன் யோகார்ட் – அரை கப் எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்.

வெந்தயத்தை முன்னமே ஊற வைத்திடுங்கள். பின்னர் ஊறிய வெந்தயத்துடன் வேப்பிலை கலந்து நன்ராக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் யோகார்ட், எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இந்த இரண்டு குறிப்புகளுமே மிகவும் பயனளிக்கும். உபயோகித்துப் பாருங்கள்.

22 1474540707 neemmask

Related posts

எந்த ஷாம்பூ போட்டீங்க… கண்டிஷனரா? சில்க் டைப்பா? டிரையா..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி உதிர்வு தொல்லைக்கு நிரந்தர தீர்வு

nathan

முடி ரொம்ப வறண்டு இருக்கா… அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?

nathan

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் கூறும் தகவல்கள்

nathan

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி ‘பேக்’

nathan

தலை அரிப்பை போக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்

nathan

அடர்த்தியான கூந்தல் பெறனுமா? இதெல்லாம் சூப்பர் குறிப்புகள்!!

nathan

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan