கொய்யா எவ்வளவு ஆரோக்கியமான பழமோ அதை விட சத்துக்கள் புதைந்துள்ளது கொய்யா இலையில். இது சருமம், கூந்தல் உடல் ஆரோகியம் என பலவித நன்மைகளை தருகிறது.
கொய்யா இலை ஏன் கூந்தலுக்கு நல்லது என்றால் கொய்யா இலையில் விட்டமின் பி சத்து நிறைந்தது. இவை கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்பவை. எப்படி கொய்யா இலைக் கொண்டு முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம் என பார்க்கலாம்
கூந்தலுக்கு ஊட்டம் தரும் சத்துக்கள் : பொதுவாக எல்லா அழகு சாதன சிகிச்சையிலும், விட்டமின் பி3, பி5, மற்றும் பி6 ஆகியவை அடங்கிய பொருட்களை உபயோகிப்பார்கள். இந்த சத்துக்கள் அனைத்தும் கொய்யா இலையில் உள்ளது.
கொய்யா இலை டிகாஷன் : கொய்யா இலைகளை டிகாஷன் தயாரித்து அதனை தொடர்ந்து உபயோகித்து வந்தால் முடி உதிர்தல் முழுவதும் நின்று, வேர்க்கால்கள் பலப்படும் . புதிதான இலைகளை உபயோகியுங்கள். அதனை வைத்து உபயோகிக்க வேண்டாம். அவ்வப்போது உபயோகிப்பதே சிறந்த பலனளிக்கும்.
தயாரிக்கும் முறை : கை நிறைய புதிய கொய்யா இலைகளை எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் இறக்கியபின் அதனை ஆறவைத்து வடிகட்டுங்கள்.
உபயோகிக்கும் முறை : வடிகட்டிய இந்த நீரை தலையில் வேர்க்கால்களில் படும்படி தடவுங்கள். நுனி வரை தடவி 20 நிமிடங்கள் அப்படிய் விடவும். பின்னர் தலையை வெறுமனே அலசவும். ஷாம்பு உபயோகிக்கக் கூடாது.
பலன்கள் : இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடைகிறது. எனவே முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியான மின்னும் கூந்தல் கிடைக்கும். நீங்கள் கலரிங்க் உபயோகித்திருந்தால் அதன் ராசாயனங்களால் உண்டான பாதிப்பை சீர் செய்கிறது. குறிப்பாக நரை முடி வளராமல் தடுக்கும்.