டயட்டில் இருப்பவர்கள் காலையில் இந்த சாத்துகுடி ரைதாவை சாப்பிடலாம். புத்துணர்ச்சி கிடைக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதா
தேவையான பொருட்கள் :
சாத்துகுடி – 1 பெரிது
கெட்டித் தயிர் – 1 கப்
தனி மிளகாய் தூள் – 2 சிட்டிகை
சீரகப் பொடி – 2 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை ( sugar ) – 1 மே.க
செய்முறை :
* சாத்துகுடியில் இருந்து கொட்டைகளை எடுத்து சதை பகுதியை தனியாக எடுத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தயிரை போட்டு நன்றாக கடைந்த பின்னர் இதில் சாத்துகுடி சதைபகுதி, தனி மிளகாய் தூள், சீரகப்பொடி, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
* சூப்பரான சாத்துகுடி ரைதா ரெடி.
* புலாவ் – பிரியாணி வகைகளுக்கு ஏற்றது.