25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201701131054151084 pongal special kadamba sambar SECVPF
சைவம்

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்

பொங்கல் பண்டிகைக்கு செய்யும் ஸ்பெஷல் உணவுகளில் கதம்ப சாம்பாரும் ஒன்று. இந்த கதம்ப சாம்பரின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் பலவிதமான காய்கறிகளைப் போட்டு செய்வது தான்.

பொங்கல் ஸ்பெஷல்: கதம்ப சாம்பார்
தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் – 1
கத்திரிக்காய் – 3
மாங்காய் – 1
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
அவரைக்காய் – 3
பீன்ஸ் – 2
வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
துவரம் பருப்பு – 200 கிராம்
புளி சாறு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
குழம்பு மிளகாய் தூள்/சாம்பார் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் அரைத்த விழுது – கால் கப்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பெருங்காயத் தூள் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

* காய்கறிகள், வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் பருப்பை கடைந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கி, குழம்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் வெந்ததும், அதில் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

* குழம்பானது நன்கு கொதிக்கும் போது, அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அதில் புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் ரெடி!!! 201701131054151084 pongal special kadamba sambar SECVPF

Related posts

சேனைக்கிழங்கு அவியல்

nathan

சப்பாத்தி உப்புமா

nathan

தனியா பொடி சாதம்

nathan

பாகற்காய் வறுவல்

nathan

உருளைக்கிழங்கு கிரிஸ்பி

nathan

வாழைக்காய் சிப்ஸ்

nathan

தயிர் சாதம்

nathan

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா : விடியோ இணைப்பு

nathan

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

nathan