19 1474283084 dryhair
தலைமுடி சிகிச்சை

கூந்தல் எலிவால் போலிருக்கிறதா? இதை யூஸ் பண்ணுங்க!!

கூந்தல் நீளமாக இல்லையென்றாலும் அடர்த்தியாக இருந்தாலே அழகாய் இருக்கும். எவ்வளவுதான் நீளமாக முடி இருந்தாலும் அடர்த்தி இல்லாவிட்டால் அழகே இருக்காது.

சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் அடர்த்தி இல்லாமல் இருக்கும். அவர்கள் போதிய நேரம் ஒதுக்கி மயிர்க்கால்களை தூண்டும்படி பராமரித்தால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கூந்தல் அடர்த்தி உண்டாக்கும் பொருட்களில் முட்டையும் ஒன்று. வாரம் இருமுறை அல்லது ஒருமுறையாவது உபயோகியுங்கள். ஒரே மாதத்தில் மாற்றம் காண்பீர்கள்.

எண்ணெய் கூந்தலுக்கான ரெசிபி : தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால், கூந்தல் பலமிழக்கும். அடிக்கடி முடி உதிர்தல் ஏற்படும். ஆகவே அவர்களுக்கு ஏற்ற குறிப்பு இது .

தேவையானவை : முட்டையின் வெள்ளைக் கரு – 2 ஆலிவ் எண்ணெய் – 1 கப் எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை : வெள்ளைகருவை தனியாக எடுத்து அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் அடர்த்தி பெறும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள்.

வறண்ட கூந்தலுக்கான ரெசிபி : வறண்ட கூந்தல் பொலிவாக இருக்காது. பொடுகு, அரிப்பு உண்டாகும் ,இவற்றால் வேகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதற்கான குறிப்பு இங்கே.

தேவையானவை : முட்டை – 2 ஆலிவ் எண்ணெய் – கால் கப் விளக்கெண்ணெய் – கால் கப் தேங்காய் எண்ணெய் – அரை கப் தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : கூந்தலுக்கு தகுந்த வாறு மேலே சொன்ன விகிதத்தில் குறைவாகவோ, அதிகமாகவோ பொருட்களை எடுத்துக்ம் கொள்ளுங்கள். முதலில் முட்டை இரண்டை மஞ்சள் கருவுடன் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதில் மற்ற பொருட்களை சேர்க்கவும்.

இதனை தலையில் ஸ்கால்ப்பிலிருந்து நுனிவரை தடவி 1 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தரமான ஷாம்பு பயன்படுத்தி குளிக்கவும். வாரம் இரு முறை இப்படி செய்தால் அற்புத பலன்களைத் தரும். முடி உதிர்தல் நின்று போய் கூந்தல் அடர்த்தி பெறுவதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள்.

19 1474283084 dryhair

Related posts

உங்க நரை முடியை மீண்டும் கருகருன்னு மாத்த…சூப்பர் டிப்ஸ்

nathan

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்

nathan

முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ்!!!

nathan

இதோ எளிய நிவாரணம்! நரைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!

nathan

அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே! வெந்தயம் இப்படியும் பயன்படுமா?

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா?

nathan