28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
kerala style tomato kulambu SECVPF
சைவம்

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த குழம்பபை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள் :

தக்காளி – 4
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1/2 கப்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் தேங்காய், வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு வெந்ததும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* அடுத்து அரைத்த தேங்காய், வெங்காய கலவையை தக்காளி கிரேவியுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு ரெடி!!!

* இந்த தக்காளி குழம்பானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.kerala style tomato kulambu SECVPF

Related posts

வெஜிடபிள் மசாலா

nathan

தக்காளி சாதம்!!!

nathan

சுண்டைக்காய் வறுவல்

nathan

சூப்பரான மாங்காய் புலாவ் செய்யலாம் வாங்க…

nathan

புதினா குழம்பு

nathan

மதுரை உருளைக்கிழங்கு மசியல்

nathan

வடை கறி

nathan

கடலைக் கறி

nathan

தக்காளி கார சால்னா

nathan