28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
karupatti ragi malt 13 1468408411
சிற்றுண்டி வகைகள்

சத்தான… கருப்பட்டி ராகி கூழ்

மாலையில் எப்போதும் காபி, டீ என்று குடிக்காமல், சற்று வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமானதுமான ராகி மாவைக் கொண்டு கூழ் தயாரித்துக் குடித்தால், பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு கருப்பட்டி சேர்த்து ராகி கூழ் தயாரித்து கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கு கருப்பட்டி ராகி கூழை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1/2 கப் கொதிக்க வைத்த பால் – 1.5 கப் கருப்பட்டி – தேவையான அளவு தண்ணீர் – 2 கப் பாதாம் – சிறிது (நறுக்கியது) ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை: முதலில் கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கருப்பட்டி கரைந்ததும் இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவைப் போட்டு, 2 கப் நீரை ஊற்றி கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் பால் ஊற்றிக் கிளறி, அடுப்பில் வைத்து, தொடர்ந்து கரண்டி கொண்டு கிளறி விட வேண்டும். ராகியானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் கருப்பட்டி பாகு, ஏலக்காய் பொடி மற்றும் பாதாம் சேர்த்து கிளறினால், கருப்பட்டி ராகி கூழ் ரெடி!!!

karupatti ragi malt 13 1468408411

Related posts

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்

nathan

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு

nathan

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

கோயில் வடை

nathan

எக் பிரெட் உப்புமா

nathan

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

சுரைக்காய் தோசை

nathan

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan