29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
10 1473504778 neem
கால்கள் பராமரிப்பு

பாத வெடிப்பை மறைய வைக்கும் அருமையான குறிப்புகள் !

பாதங்களில் வெடிப்பு சிலருக்கு தீரா பிரச்சனை. அதுவும் வெறும் கால்களில் நடந்து கொண்டேயிருப்பவர்களுக்கு பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும்.

அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும். உங்களின் அழகான பாதங்களை கெடுக்கும் வகையில் அமைந்திருக்கும் பாதங்களுக்காக இங்கே சில குறிப்புகள். முயன்று பாருங்கள்.

வேப்பிலை பேஸ்ட் : கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

பப்பாளி ஸ்க்ரப் : நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்

வாழைப்பழம் : வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.

10 1473504778 neem

Related posts

வீட்டில் கால் பாதங்களை பராமரிக்க

nathan

சிலருக்கு பித்தவெடிப்பு ஏற்படக்காரணம் என்ன?

nathan

பாதங்களைப் பாதுகாக்க!

nathan

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால்

nathan

பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு….

sangika

உங்க கால் விரல் இப்படி இருக்கா?

nathan

கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

nathan

ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?….

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி?

nathan