அதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரை, பருப்பு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்
தேவையான பொருட்கள் :
பசலைக் கீரை – 1 கட்டு
பயத்தம் பருப்பு – 50 கிராம்
தண்ணீர் – 500 மி.லி.
தக்காளிப் பழம் – 2
தனியா பொடி – 1 தேக்கரண்டி
சீரகப்பொடி – அரை தேக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
வெங்காயம் – 1
எலுமிச்சம் பழச்சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பருப்புடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பின்னர், சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெண்ணெயை போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தையும் பூண்டையும் அதில் வதக்கவும்.
* அடுத்து அதில் பசலைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.
* அத்துடன் சீரகப்பொடி, தனியா பொடி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* பின்னர் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்தவுடன் இறக்கி மிளகுத்தூள், எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்க்கவும்.
* சத்தான பசலைக்கீரை பருப்பு சூப் தயார்.