keerai masiyal 30 1464596292
சைவம்

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அத்தகைய கீரையை பலவாறு செய்து சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு கீரையைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் மசியல் செய்யத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு அந்திரா ஸ்டைலில் எப்படி கீரை மசியல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பசலைக்கீரை/அரைக்கீரை – 3 கப் தக்காளி – 2 பச்சை மிளகாய் – 1 உப்பு – தேவையான அளவு

வறுப்பதற்கு… எண்ணெய் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 2 சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 6 பற்கள்

தாளிப்பதற்கு… எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கீரை, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கீரையில் சேர்த்து, சிறிது உப்பையும் சேர்க்க வேண்டும். பின்பு கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளலாம். பிறகு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்த்தால், ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல் ரெடி!!!

keerai masiyal 30 1464596292

Related posts

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan

வாங்கிபாத்

nathan

கறிவேப்பிலை சாதம்

nathan

சளி, இருமலுக்கு சிறந்த மிளகு அன்னம்

nathan

சௌ சௌ ரெய்தா

nathan

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

தவா மஸ்ரூம் ரெசிபி

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

nathan

அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்

nathan