33.4 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201701071522340370 madurai chicken biryani SECVPF 1
அசைவ வகைகள்

சிக்கன் கோழி பிரியாணி

மதுரை ஸ்பெஷல் பிரியாணிக்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து செய்வார்கள். இப்போது நாளை சன்டே ஸ்பெஷல் மதுரை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சன்டே ஸ்பெஷல்: சிக்கன் கோழி பிரியாணி
தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி – இரண்டரை கப்
சின்ன வெங்காயம் – ஒரு கப்
நாட்டுத் தக்காளி (பெரியது) – 3
பச்சை மிளகாய் – 10
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 3 கப்
தயிர் – அரை கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப

தாளிக்க:

பட்டை – 2
லவங்கம் – 2
ஏலக்காய் – 4
பிரிஞ்சி இலை – 1
அன்னாசிப்பூ – 1
கடல்பாசி – 1
லவங்க மொட்டு – 1
சோம்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்
நெய் – கால் கப்
கொத்தமல்லித்தழை, புதினா – தலா ஒரு கைப்பிடி

செய்முறை :

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

* சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள்.

* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.

* தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரியவேண்டும். தீயக்கூடாது, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிரியாணியின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போன வதக்கவும்.

* அடுத்து தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.

* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கி தொக்கு பதம் வந்தவுடன் சிக்கனை போட்டு, நன்கு வதக்குங்கள்.

* எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே சிக்கனை நன்கு வேகவிடுங்கள்.

* சிக்கன் நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். இதற்கு தண்ணீரே சேர்க்கக் கூடாது.

* பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும்போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள்.

* இந்த மதுரை கோழி பிரியாணியின் மணம் ஊரையே இழுக்கும்!
201701071522340370 madurai chicken biryani SECVPF

Related posts

சுவையான நீலகிரி சிக்கன் குருமா

nathan

முட்டை தக்காளி குழம்பு

nathan

மணமணக்கும் மதுரை மட்டன் சுக்கா

nathan

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)

nathan

வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி

nathan

சூப்பரான காடை முட்டை குழம்பு

nathan

டின் மீன் கறி

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

nathan