26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
PhotoSamaiyal894
சிற்றுண்டி வகைகள்

பூசணி அப்பம்

தேவையானவை: வெள்ளைப் பூசணிக்கீற்று – ஒன்று, தேங்காய் – ஒரு மூடி, வெல்லம் – 300 கிராம், அரிசி மாவு – ஒரு டம்ளர், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: பூசணிக்கீற்றை நன்கு கழுவித் துடைத்து, துருவிக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பூசணித் துருவலை சுருள வதக்கிக்கொள்ளவும். ஆறிய பின் அரிசி மாவையும் துருவிய தேங்காயையும் சேர்க்கவும். வெல்லத்தை சிறிது இளம் சூடான நீரில் கரைத்து, வடிகட்டவும். கரைத்த வெல்லத்துடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் – அரிசி மாவு – வதக்கிய பூசணி கலவையை சேர்த்து அப்பத்துக்கு கரைப்பது போல கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இந்த அப்ப மாவை சிறிய கரண்டியால் எடுத்து எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து வைக்கவும்.

கார அப்பம் செய்ய வேண்டும் என்றால், தேங்காயுடன் 3 அல்லது 4 பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சித் துருவல் சேர்த்து அரைத்துக்கொண்டு. வதக்கிய பூசணி, அரைத்த தேங்காய் விழுது, அரிசி மாவு, உப்பு, கால் கப் புளித்த தயிர் விட்டு கரைத்து, மாவை அப்பமாக பொரித்து எடுக்கவும்.

பிரெட் மஞ்சூரியன்

தேவையானவை: கோதுமை பிரெட் – 4 ஸ்லைஸ், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், குடமிளகாய் – தலா ஒரு கைப்பிடி அளவு, கடலை மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், சோயா சாஸ், தக்காளி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு, சதுரமாக வெட்டி, வெண்ணெயில் பொரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு. காய்கள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் வதங்கியதும், பொரித்த பிரெட், உப்பு, கடலை மாவு சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.Photo+Samaiyal+894

Related posts

டபுள் டெக்கர் பரோட்டா

nathan

வரகு பொங்கல்

nathan

வாழைப்பழ பணியாரம்:

nathan

முளைகட்டிய தானிய சப்பாத்தி

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சுவையான ஆனியன் வரகரிசி அடை

nathan

ரவா அப்பம்

nathan

சுவையான ஓட்ஸ் மிளகு அடை

nathan

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவு கிடைக்கும். இன்று மாங்காய் வைத்து அனைவருக்கும் விருப்பமான சூப்பரான ப…

nathan