28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl4432
கேக் செய்முறை

ஆல்மண்ட் மோக்கா

எப்படிச் செய்வது?

அக்ரூட் அல்லது பாதாைம பொடியாக நறுக்கவும். பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சிறிது மிருதுவான பிறகு மிக்ஸியில் அடித்து பேஸ்ட் செய்யவும். முட்டையை மஞ்சள் தனி, வெள்ளை தனியாகப் பிரித்துக் கொள்ளவும். மைதாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து கொள்ளவும். இப்போது வெண்ணெய், சர்க்கரை இவற்றை நுரைக்க அடித்தபின் இன்ஸ்டன்ட் காபித்தூளை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.

ஆப்பிளைத் துண்டு துண்டாக நறுக்கி அதில் பேரீச்சம்பழ பேஸ்ட் முதலியவற்றையும் சேர்த்து அடித்துக் கலக்கவும். இப்போது முட்டையின் மஞ்சள் கருவை அடித்து அதையும் இந்த வெண்ணெய், சர்க்கரை, பேரீச்சம்பழ ஆப்பிள் கலவையுடன் சேர்த்து அடிக்கவும். கடைசியில் மைதா கலக்கவும். மைதாவை மெதுவாகக் கலக்கவும்.

அடிக்க வேண்டாம். கடைசியில் முட்டையின் வெள்ளையை நுரைக்க அடித்து மெதுவாக கலந்து, நறுக்கி வைத்துள்ள வால்நட்டையையும் சேர்க்கவும். கேக் செய்யும் ட்ரேக்களில் விட்டு, 180 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் 30 நிமிடம் பேக் செய்யவும்.

இப்போது கடைசி ஸ்டெப்…

சுமார் 1/2 கிலோ கிரீம் எடுத்து 1 கப் குளிர்ந்த பாலுடன் கலந்து சிறிது சிறிதாக அடித்து சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை அடிக்கவும். தயாரான கேக்கை, நீளவாட்டில் ஸ்லைஸ் செய்து, கிரீம் நடுவில் பரத்தி விடவும். இவ்வாறு ஒவ்வொரு ஸ்லைஸ்களின் நடுவிலும் பரப்பி, முழுவதையும் மூடிவிட்டு, அக்ரூட் கொட்டைகளை வைத்து அலங்கரித்து, சுமார் 2 மணி நேரம் கழித்துப் பரிமாறவும். மிகவும் ருசியான இதை வரும் கோடை நாட்களில் சில்லென்று குழந்தைகளுக்கும், விருந்தாளிகளுக்கும் பரிமாறலாம்.sl4432

Related posts

பலாப்பழ கேக்

nathan

காபி  கேக்

nathan

கேரட் கேக் / Whole Wheat Carrot Cake

nathan

பச்சை பட்டாணி கேக்: ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

மினி பான் கேக்

nathan

முட்டையில்லாத ரிச் கேக்

nathan

கேரட் கேக் வித் சாக்லெட் ட்ரஃபிள்

nathan