25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1468929899 3808
சைவம்

வாழைக்காய் கூட்டு

தேவையானவை:

வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சைப்பயறு – 1 கப்
பச்சை மிளகாய் – 6
தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணை – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கீற்று

செய்முறை:

பயத்தம் பருப்பு (அல்லது) பச்சை பாசிப் பருப்பு 6 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் ஊற வைத்த பயிறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக விடவும். வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும், தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.

சுவையான வாழைக்காய் கூட்டு தயார்….!1468929899 3808

Related posts

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan

வெஜிடேபிள் புலாவ்

nathan

வெங்காய தாள் கூட்டு

nathan

வாழைக்காய் பொடிக்கறி

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு செய்திடுங்கள் இஞ்சி குழம்பு…!

nathan

மாங்கா வத்தக் குழம்பு

nathan

சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி

nathan

பட்டாணி பிரியாணி

nathan

பரோட்டா!

nathan