27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld45776
கண்கள் பராமரிப்பு

கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்

கண்களுக்குக் கீழே கருவளையங்கள் என்பது ஒருவருக்குத் தூக்கம் தொலைக்க வைக்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. தூக்கம் தொலைப்பதால் அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்பது வேறு கதை. கண்களுக்கு அடியில் வருகிற கருவளையமானது ஆண், பெண் யாரையும் பாதிக்கலாம். காரணத்தைக் கண்டுபிடித்து ஆரம்பத்திலேயே அக்கறை எடுத்துக் கொண்டால் கருவளையங்களைப் போக்கலாம். அதிகமாவதைத் தவிர்க்கலாம் என்கிறார் நேச்சுரல்ஸ் வீணா குமாரவேல். கருவளையங்கள், கண்களுக்கடியில் காணப்படும் வீக்கம், சுருக்கங்கள் ஆகியவற்றுக்கான காரணங்களுடன், இவற்றைப் போக்கப் பயன்படுத்தும்
அழகு சாதனங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என எல்லாவற்றையும் விளக்குகிறார் அவர்.

கருவளையங்களுக்கான காரணங்கள்

பரம்பரைத்தன்மை பரம்பரையாக சிலருக்கு இந்தப் பிரச்னை தொடரலாம். ஒரு சிலருக்கு காலப் போக்கில் மறைவதும், வேறு சிலருக்கு அப்படியே நின்று விடுவதும் உண்டு.

தூக்கமின்மையும் அதிக தூக்கமும் 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்களுக்கு கருவளையங்கள் வரும். அதே போல அளவுக்கு அதிகமாக தூங்குகிறவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.

ஸ்ட்ரெஸ்மன அழுத்தம் என்பது தலை முதல் கால் வரை எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. அது கருவளையங்களையும் விட்டு வைப்பதில்லை.

சைனஸ் பிரச்னை

இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு மூக்கையும் கண்ணையும் இணைக்கிற ரத்த நாளங்கள் அடைபட்டுப் போவதன் விளைவாகவும் கண்களுக்கு அடியில்
கருவளையங்கள் வரலாம். கண்களுக்குக் கீழே பை மாதிரித் தெரியலாம்.

இரும்புச்சத்துக் குறைபாடு

இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் ரத்தத்தில் குறைவாக இருப்பதால்
கருவளையங்கள் வரலாம்.

வாழ்க்கை முறை

கண்ட நேரத்துக்கு சாப்பிடுவது, கண்ட நேரத்துக்குத் தூங்குவது, புகை மற்றும் மதுப் பழக்கம், அடிக்கடி காபி, டீ குடிப்பது போன்ற பழக்கங்களும் கருவளையங்கள்
மற்றும் கண்களுக்கடியிலான வீக்கத்துக்குக் காரணம்.

கதிர்வீச்சு

எந்நேரமும் கம்ப்யூட்டர், செல்ஃபோன், டி.வி., லேப்டாப் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அந்தக் கதிர்களின் தாக்குதல் காரணமாகவும் கருவளையங்கள் வரலாம்.

ஹார்மோன் மாறுதல்கள்

பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் மெனோபாஸ் காலத்திலும் ஏற்படுகிற ஹார்மோன் மாறுதல்களும் கருவளையங்களை ஏற்படுத்தலாம்.

சருமத்தில் ஏற்படுகிற அசாதாரண மாற்றங்கள்

கண்களுக்கடியில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. சென்சிட்டிவானது. அதனால்தான் உள்ளே உள்ள ரத்த நாளங்கள் வெளியில் தெரிகின்றன. சரும நிறத்தைத் தீர்மானிக்கிற மெலனின், சீராக வினியோகிக்கப்படாதபோது அது கருவளையங்களாகப் பிரதிபலிக்கும்.

வயது

வயதாக ஆக, நாம் நம் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜனை இழப்போம். கண்களுக்கு அடியிலும் இது குறைவதே கருவளையங்களுக்கும்,
கண்களுக்கு அடியில் உண்டாகிற சுருக்கங்களுக்கும் காரணம்.

அதிக உப்பு

அதிக உப்பு சேர்த்த உணவுகள் உடல் முழுக்கவே வீங்கிய தோற்றத்தைத் தரும். கண்களுக்கு அடியில் வீக்கத்துக்கும் அது ஒரு காரணம். கண்களுக்கு அடியில்
ஏற்படும் சுருக்கங்களுக்கு காரணங்கள்… வயதானவர்களுக்குத்தான் கண்களுக்கு அடியில் சுருக்கங்கள் ஏற்பட வேண்டும் என அவசியமில்லை. இந்த சுருக்கங்களுக்கு Crows feet என்றும் Laughter lines என்றும் பெயர். முக பாவனைகளே இதற்கான பிரதான காரணங்கள். இதைத் தவிர்ப்பது சிரமம்.

மற்றபடி சரியான சருமப் பராமரிப்பின்மை, அதிக நேரம் வெயிலில் அலைவது, கண்களைச் சுருக்கிப் பார்ப்பது, தலையணையில் முகத்தை அழுத்திய படி ஒரு பக்கமாகப் படுத்துத் தூங்குவது, கண்களை அடிக்கடி கசக்குவது, கண்களின் மேக்கப்பை முறையாக அகற்றாமல் தூங்குவது போன்றவையும் சுருக்கங்களை
ஏற்படுத்தலாம்.

கருவளையங்களுக்கான அழகு சாதனங்களில் கவனம்…

கருவளையங்களைப் போக்க சீரம், கிரீம், ஜெல் என பல அழகு சாதனங்கள் கிடைக்கின்றன. இவற்றில் சீரம் என்பது நீர்க்க இருக்கும். சற்றே ஸ்ட்ராங்கானது.
சீக்கிரமே சருமத்தால் உறிஞ்சப்படும். கிரீம் என்பது அடர்த்தியாக இருக்கும். ரொம்பவும் மிதமாக உபயோகிக்க வேண்டும். எதை உபயோகிப்பதானாலும் அவற்றில் உள்ள கலவையைப் பற்றிய விழிப்புணர்வும் அவை பாதுகாப்பானவைதானா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலான ஐ கிரீம்களில் வைட்டமின் கே முக்கிய பொருளாக சேர்க்கப்படும். இது ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து சருமத்தைக் கருப்பாக்கக் கூடியது. சிலருக்கு கண்கள் சிவந்து போவது, அரிப்பு போன்றவையும் வரலாம்.Plant extracts என்று குறிப்பிடப்பட்டிருந்தால் ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும். கெமிக்கல்கள் அதிகம் குறிப்பிடப்பட்டிருந்தால் கவனம் தேவை.

இந்த வகையான கிரீம்களில் ஹைட்ரோகுவினான் என்கிற கெமிக்கலும் சேர்க்கப்படும். அது கண்களுக்கு அடியில் உள்ள சருமத்தை பிளீச் செய்யக்கூடியது. கருவளையத்துக்கான காரணம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாக இருக்கலாம். சரியான காரணம் தெரியாமல்
ஹைட்ரோகுவினான் சேர்த்த ஐ கிரீமை உபயோகித்தால், அது சரும நிறத்தை சீரற்று மாற்றும்.

ரெட்டினால் என்கிற கெமிக்கலும் ஐ கிரீம்களில் சேர்க்கப்படுகிறது. இது சுருக்கங்களை நீக்கவும் பயன்படுகிறது. கருவளையங்களையும் போக்கக்கூடியது. ஆனால், இது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு வீக்கத்தைக் கொடுக்கும். கருவளையங்களுக்கான பார்லர் சிகிச்சை, வீட்டு சிகிச்சை, குறைக்கும் வழிகள் போன்ற தகவல்கள் அடுத்த இதழிலும்…ld45776

Related posts

கண் புருவம் அழகாக.

nathan

கருவளையங்களை போக்க சூப்பரான டிப்ஸ்

nathan

கருவளையங்களுக்கான காரணங்கள், தீர்வுகள், லேட்டஸ்ட் சிகிச்சைகள்!…

sangika

மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் ……..

sangika

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

nathan

கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

கருவளையம் மறைய…

nathan

கருவளையம் நீங்க இத செய்யுங்கள்!…

sangika

சன் கிளாஸ் கண்ணை காக்குமா? வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan