32.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
201701070931141975 Unique Embroidery sarees SECVPF
ஃபேஷன்

தனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்

மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்
மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இது பார்க்க எம்பிராய்டரி சேலைகள் போல காணப்பட்டாலும் முற்றிலும் துணியிலேயே நெய்யப்படும் சேலையாக ஜாக்வார்ட் விளங்குகிறது. ஜாக்வார்ட் என்பது அதிக நுணுக்கமான விரிவாக நெய்யப்பட்ட ஒரு துணிவகையாகும். இதற்கென தனிப்பட்ட தறி பயன்படுத்தப்படுகிறது.

இந்த தறியை கண்டுபிடித்தவர் பெயரான ஜாக்வார்ட் என்றவாறே இதில் நெய்யப்படும் துணி வகை அழைக்கப்படுகிறது. ஜாக்வார்ட்-ன் நுண்ணிய தரம் என்பது இத்துணி வகையின் தனி சிறப்பாகும். ஜாக்வார்ட் தறிமூலம் பட்டு மற்றும் சித்திரபட்டு போன்ற சில வகை துணிகளும் நெய்யப்படுகிறது. ஜாக்வார்ட் துணிகளின் மூலம் முக்கியமான சேலைகள், லெஹன்கா மற்றும் அழகு வேலைப்பாடு திரைசீலைகள் போன்றவை உருவாக்கப்படுகிறது.

ஜாக்வார்ட் தறி வாயிலாக பல தரப்பட்ட நூல்களும் ஒரே சீராக இயக்கப்பட்டு பூ வேலைப்பாடு முதல் பலதரப்பட்ட வேலைபாடுகளையும் துணியிலேயே சற்று தடிமனாக தெரியும் வகையில் நெய்து தரப்படும். இதனால் எம்பிராய்டரி சேலை போன்று நூல் பிரித்து சேலையின் பொலிவு கெட்டு விடுமோ என்ற பயமும் தேவையில்லை. இதிலுள்ள பன்ச்-கார்டு மூலம் தேவையான பலதரப்பட்ட டிசைன்களில் துணி நெய்யப்படும்போது உருவாக்கி கொள்ள முடியும்.

ஜாக்வார்ட் துணிகளின் வகைகள் :

ஜாக்வார்ட் துணி என்பது கணினி சார்ந்த முறையில் தறியை இயக்கி பெறப்படுவது இல்லை. மனிதர்களின் தனி கட்டுபாட்டில் இயங்கக்கூடிய வகையாக உள்ளது. மேலும் இதில் எண்ணற்ற நூல் இழைகளை இணைப்பதற்கு ஏற்ப ஆயிரக்கணக்கான கொக்கி அமைப்புகள் உள்ளது. எனவே கணினி துணையுடன் இந்த தறிகளை இயக்குவது சற்று கடினமாகவே உள்ளது.

தனித்தன்மையான ஜாக்வார்ட் துணியுடன் பிற துணை துணி பிரிவுகளும் இதில் உருவாக்கப்படுகிறது. அதாவது பிராகோடு துணி, டாமாஸ்க் துணி மற்றும் மாட்டலிஸ் துணி போன்றவை. பிராகோட் என்பது அதிக வண்ண நூலிழையுடன் பிரம்மாண்டமான தோற்றத்துடன் உருவாக்கப்படுவது மற்றும் அதிக கனமான துணி அமைப்பாகவும் உள்ளது. பிராகோட்டின் அதிக மென்மை மற்றும் நல்ல பதிப்பே டாமாஸ்க் எனும் சித்திர பட்டு துணி. ஒரு நிறத்தில் செயற்கை இழை மூலமாக இது உருவாக்கப்படுகிறது. மாட்டலிஸ் துணி என்பது பருத்தி, பட்டு மற்றும் ரேயான் துணி இழைகள் மூலம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் துணி வகை.

விதவிதமான ஜாக்வார்ட் சேலைகள் :

ஜாக்வார்ட் சேலைகள் என்பதில் பலவிதமான டிசைன் மற்றும் துணிவகைகளுக்கு ஏற்ப பல பிரிவுகள் உள்ளன. தூய பட்டு ஜாக்வார்ட் சேலைகள், பிளைன் ஜாக்வார்ட் சேலைகள், கிரேப் ஜாக்வார்ட் சேலைகள் என பல வகைகள் உள்ளன. இவையனைத்தும் நவீன வடிவமைப்புடன் அழகிய நுணுக்க வேலைப்பாட்டுடன் நெய்து தரப்படுகிறது.

வண்ண பிரகாசமான ஜாக்வார்ட் சேலைகள் :

ஜாக்வார்ட் சேலைகள் என்பது சேலையின் பிரதான துணி அமைப்பு ஏதேனும் ஓர் டிசைன் வாயிலாக நெய்யப்பட்டிருக்கும். சேலையின் மேல் எழுத்து உப்பலாக ஒரு டிசைன் அமைப்பும், அதே நிறம் அல்லது வேறு நிறத்தில் உள் அமுங்கிய அமைப்பு என்றவாறு சேலை இருக்கும். இன்றைய நாளில் மிக விலையுயர்ந்த வெட்டிங் ஜாக்வார்ட் சேலை முதல் சாதாரண ஜாக்வார்ட் சேலை வரை பலவும் பல டிசைன்களில் கிடைக்கின்றன. இதில் ஒரு மார்டன் உடன் அதிக வேலைபாட்டுடன் சேலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 201701070931141975 Unique Embroidery sarees SECVPF

Related posts

வசீகரிக்கும் வைரம்!

nathan

கருப்பான சிவப்பான மற்றும் குண்டான பெண்கள் எப்படி உடை அணிந்தால் அழகு!

nathan

ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல்…ஒரு டஜன் யோசனைகள்!

nathan

பட்டுப்பெண்களின் பளபள புடவைகள்!

nathan

க்யூட் குட்டீஸ் கிறிஸ்துமஸ் கனவுகள்

nathan

ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்

nathan

இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்

nathan

உடல்வாகுக்கு ஏற்ற உடைகள்!

nathan

100 புடவை கட்டுங்கள் புதுமைப் பெண்களே!

nathan