201701031204134526 How to use soap to clean your face SECVPF 2
முகப் பராமரிப்பு

சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்

சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. முகத்தை இயற்கை வழியில் எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்
நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் பயன்படுத்துவது தான் சோப்பு. இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோப்புகளை முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

சோப்புகளைப் பயன்படுத்தாமல் முகத்தை இயற்கை வழியில் எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேன் மிகவும் சிறப்பான மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் ஓர் அற்புத பொருள். இது சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும். அதற்கு தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய் மேக்கப்பை நீக்க மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இனிமேல் பணத்தை வீணாக மேக்கப் ரிமூவர் வாங்க செலவழிக்காமல், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி நீக்குங்கள்.

எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமையைப் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

தயிர் ஓர் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும். குறிப்பாக தயிரை வெயிலில் அதிகம் சுற்றுபவர்கள் பயன்படுத்தினால், வெயிலால் கருமையான சருமத்திற்கு, மீண்டும் நிறமூட்டலாம்.

ஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதோடு, மேக்கப்பை நீக்கவும் உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலைக் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்
201701031204134526 How to use soap to clean your face SECVPF

Related posts

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

nathan

எண்ணெய் சருமம் முகப்பருவை ஏற்படுத்துமா?

nathan

சீக்கிரமா கலர் ஆக நீங்க க்ரீம் யூஸ் செய்பவரா? உஷார்!

nathan

ஆண்களே உங்களுக்குதான் இந்த விஷயம்! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

நீங்க கருப்போ சிகப்போ ஆனா பார்க்க பளபளன்னு இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

nathan

முகத்தை பளபளப்பாக்குவதற்கு ஒரு துளி தயிர் போதும் தெரியுமா?

nathan

பளீச் அழகு பெற

nathan

மனதை கொள்ளை கொள்ளும் பிங்க் நிற உதடுகளுக்கு இந்த ஒரே பொருள் போதும்!

nathan