தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 1 1/4 கப்
மீல் மேக்கர் – 3/4 கப்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
தக்காளி – 1 (நறுக்கியது)
கொத்தமல்லி – 1/4 கப்
புதினா – 1/8 கப்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பட்டை – 1/4 இன்ச்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* பாசுமதி அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* ஒரு கப் தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, அதில் மீல் மேக்கரை சேர்த்து 10 நிமிடம் தனியாக ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து மூன்று முறை குளிர்ந்த நீரில் கழுவி தனியாக வைத்து கொள்ளவும்.
* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் பென்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மீல் மேக்கர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, அத்துடன் பாசுமதி அரிசியை நீரில் கழுவி சேர்த்து 15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதில் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து, கொதி வந்ததும் குக்கரை மூடி குறைவான தீயில் 3-4 விசில் விட்டு இறக்கினால், மீல் மேக்கர் பிரியாணி ரெடி!!!