30.6 C
Chennai
Saturday, Jun 28, 2025
அசைவ வகைகள்

முட்டை சில்லி

முட்டை சில்லி

Description:

egg-chilliஇந்த செய்முறையை உங்கள் ரொட்டி மற்றும் சாதத்திற்கு ஏற்ற‌ ஒரு காரசார‌மான குழம்பு ஏற்றது. இந்த காரசாரமான குழம்பை சாப்பிட்டு விட்டு அப்புறம் நீங்கள் எங்களை திட்டக்கூடாது, இந்த குழம்பு மிகவும் காரமானது என்று ஏன் எச்சரிக்கவில்லை என்று எங்களை நீங்கள் கேட்கக்கூடாது!

தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை
வெங்காயம்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
தனியா தூள்
கரம் மசாலா
பச்சை மிளகாய், நன்கு நறுக்கியது
பூண்டு
சோள மாவு
தக்காளி கூழ்
புதிய கருவேப்பிலை ஒரு குச்சி அழகுபடுத்த
எண்ணெய்
உப்பு சுவைகேற்ப‌
தயாரிப்பு முறை:
1. சோள மாவு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஒரு கலவையாக தயார் செய்து கொள்ளவும்.
2. இந்த கலவையில் பாதியாக கட் செய்த முட்டையை பிரட்டி ஒரு கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ள‌வும், பின் இதை ஒரு சமையலறை துண்டின் மீது தனியே வைத்துக் கொள்ளவும்.
3. அதே எண்ணெயை 2 தேக்கரண்டி ஒரு கடாயில் எடுத்துக் கொண்டு, இதில்  நன்கு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தக்காளி கூழ் சேர்த்து நன்கு வத‌க்கவும்.
5. வேகவைத்த முட்டைகளை இதில் சேர்த்து, சுவைக்கேற்ப‌ உப்பு சேர்க்கவும். இதை மெதுவாக கலந்து மேலும் ஒரு சில நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும்.
6. கறிவேப்பிலை கொண்டு அழகுபடுத்தி சூடாக பரிமாறவும்

Related posts

கிராமத்துக் கோழிக் குழம்பு (village chicken kuzhambu)

nathan

மாட்டு இறைச்சி சமோசா

nathan

மிகவும் சிம்பிளான சிக்கன் கிரேவி …

nathan

Prawn Briyani / இறால் பிரியாணி

nathan

மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

sangika

கசகசா பட்டர் சிக்கன்

nathan

எப்படி என்று பார்க்கலாம் ஹாங்காங் ஃப்ரைடு இறால்

nathan

நெத்திலி மீன் கிரேவி

nathan

பட்டர் சிக்கன் மசாலா

nathan