27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
26 1472189584 aloevera
கண்கள் பராமரிப்பு

கண்களில் சுருக்கங்களை போக்கும் பெஸ்ட் ரெசிப்பிஸ் !!

கண்கள்தான் நம் உள்ளத்தை பேசும். கோபமோ, மகிழ்ச்சியோ, முதலில் வெளிப்படுவது கண்களில்தான். அதனால்தான் முதுமை தோற்றமும் முதலில் கண்களில் தெரியும்.

நமது முகத்தில் கண்களைச் சுற்றிலும் மிக மெல்லிய சருமம் உள்ளது. சூரிய ஒளி பெறும்போது முதலில் பாதிக்கப்படுவது கண்கள்தான் .இதனை தவிர்க்க வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து கொள்வது கண்களுக்கு பாதுகாப்பானது.

வயது அதிகமாகும்போது, வேலைப் பளு கவலை எல்லாம் சேர்ந்து கண்களில் தொய்வும், சுருக்கங்களும் கருவளையமும் வந்து உங்களுக்கு முதுமை வந்து கொண்டிருப்பதை சுட்டிக் காட்டும்.

இந்த மாதிரியான தோற்றத்தில் உங்களை நீங்களே கண்ணாடியில் பார்க்கும்போது மனச் சோர்வு வரும். ஆனால் தளர வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களை உங்கள் கண்களுக்காக நீங்கள் கொடுத்தால் 50 வயதிலும் இளமையாக உங்களை வைத்துக் கொள்ளலாம்.

கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்கள், கருவளையம் போக்க இங்கே கூறப்பட்டுள்ள குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படி என பார்க்கலாம்.

அவகேடோ + தேன் : 1 ஸ்பூன் அளவுள்ள அவகேடோவின் சதைப் பகுதியை அரைத்து, அதனுடன் அரை டீ ஸ்பூன் தேன் கலந்து கண்களைச் சுற்றிலும் மெல்லிய லேயராக போடுங்கள். காய்ந்ததும் கழுவிவிடவும். வாரம் ஒருமுறை செய்யவும்.

வெள்ளரி+ புதினா : வெள்ளரிச் சாறு மற்றும் புதினா சாறு இரண்டையும் சம அளவு எடுத்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள். தினமும் செய்யலாம். கருவளையம், சுருக்கங்கள் போயே போச்சு என குதூகலிப்பீர்கள்.

ஆலிவ் எண்ணெய் + கேரட் : கேரட்டை அரைத்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் கலந்த கொள்ளுங்கள். கண்களை மூடி, கண்கள் மேல் முழுவதும் மூடுவது போல், இந்த கலவையை மாஸ்க் போல போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். மிகவும் புத்துணர்வு தரும். கண்களில் ஈர்ப்புத்தன்மையை தரும்.

பால் : காய்ச்சாத பாலில் பஞ்சினால் நனைத்து கண்களைச் சுற்றிலும் ஒத்தி எடுங்கள். காய்ந்ததும் கழுவவும். தினமும் 2 தடவை செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் உள்ள லினோலெயிக் அமிலம் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை ரிப்பேர் செய்து இளமையை தருகிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை கண்களைச் சுற்றிலும் தடவிவிட்டு படுங்கள்.

பப்பாளி : பப்பாளியை முகம் முழுவதும் தேய்க்கலாம். கண்களை சுற்றிலும் மெதுவாய் பப்பாளியின் சதைப் பகுதியை த்டவி மசாஜ் செய்து 5 நிமிடத்தில் கழுவவும்.

கற்றாழை ஜெல் : இது மிகச் சிறந்த தீர்வு. சென்ஸிடிவான சருமத்திற்கு ஏற்றது. சுருக்கங்களை போக்கி, இளமையான சருமத்தை 100 சதவீதம் தரும். கற்றாழையின் சதைப் பற்றை எடுத்து சிறிது பால் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள்.

26 1472189584 aloevera

Related posts

கண்ணை என்ன செய்யலாம்?

nathan

அழகிய புருவங்களைப் பெறுவதற்கு இயற்கை முறையில் இதனைப் பயன்படுத்துங்கள்.

sangika

கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது

nathan

கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்

nathan

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு . . .

nathan

கண் கருவளையத்தை போக்கும் வெள்ளரி

nathan

பிரமாதமான‌ கண்களை பெற‌ 5 சூப்பர் அழகுக் குறிப்புகள் … அதுவும் ஒப்பனை எதுவும் இல்லாமல்!

nathan

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:

nathan

உங்களுக்கு தெரியுமா கண் புரை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய மருத்துவங்கள்!!

nathan