26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
25 1472103014 6 face pack
சரும பராமரிப்பு

2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

வெள்ளைத் தோலைப் பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. ஒவ்வொருவரும் தாங்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று தான் விரும்புகிறோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை தினமும் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் எப்பலனும் கிடைத்தபாடில்லை.

மேலும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடும். ஆனால் சரும நிறத்தை அதிகரிக்க இயற்கை வழிகளை நாடினால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான ஃபேஸ் பேக் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

மாதுளை தோல் இந்த ஃபேஸ் பேக்கில் முக்கிய பொருளாக இருப்பது மாதுளை தோல். மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மாதுளை தோல் பொடி தயாரிப்பது எப்படி? மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பொடி 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்: மாதுளை பொடி – 1 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2-3 துளிகள் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன் பால் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: * மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். * பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கான ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: மாதுளை பொடி – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2-3 துளிகள் ரோஸ் வாட்டர் – சிறிது

செய்முறை: அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நன்மைகள் இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முதுமைப் புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள், கருவளையங்கள் போன்றவற்றை நீக்குவதோடு, சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெளிக்காட்டும்.

25 1472103014 6 face pack

Related posts

சருமத்தின் வயதினை கட்டுப்படுத்தி சிவப்பழகு பெற

nathan

பரு, கருந்திட்டு, கருவளையம்… அசத்தல் தீர்வுகள்! அழகு குறிப்புகள்!!

nathan

ஆண்களே உங்களது எண்ணெய் வழியும் சருமத்தோடு சிரமப்படாதீங்க! இதை முயன்று பாருங்கள்!

nathan

தோல் பளபளக்க…

nathan

தேங்காய் பால் ரெசிப்பிகள் எப்படி உங்கள் அழகை அதிகரிக்கச் செய்யும் என தெரியுமா?

nathan

வியர்குருவால் கஷ்டப்படுறீங்களா? இதோ அதைப் போக்க சில வழிகள்!

nathan

கோடையில் சரும பாதுகாப்பு

nathan

தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்

nathan

முகத்தில் வடியும் எண்ணெய்யையும் குறைக்க!…

sangika