27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
sl4395
கார வகைகள்

குழிப் பணியாரம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்,
இட்லி அரிசி – 1 கப்,
உளுந்து – 1/2 கப்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3 முதல் 4,
கறிவேப்பிலை – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
சிறிய வெங்காயம் – 20,
சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 + 1/2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். உப்பு, சமையல் சோடா சேர்த்து கரைத்து 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். கடாயில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், வெங்காயத்தை வதக்கி பணியார மாவில் சேர்க்கவும். பணியாரக் கல்லை சூடாக்கி, குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி, மூடி வைத்து வேக விடவும். பின்னர், அடிப்பக்கம் மேலாக திருப்பி வேக வைத்து, சட்னியுடன் பரிமாறவும்.sl4395

Related posts

மீன் கட்லட்

nathan

பருத்தித்துறை வடை

nathan

சோயா தானிய மிக்ஸர்

nathan

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

nathan

காரைக்குடி மீன் குழம்பு

nathan

காரா சேவ்

nathan

மகிழம்பூ முறுக்கு

nathan

New Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…!

nathan

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!….

sangika