25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 1471935693 1 yogurt
சரும பராமரிப்பு

அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

பெண்களுள் பலர் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று மார்பகங்கள் தொங்கி அசிங்கமாக காணப்படுவது. பெரிய மார்பகங்கள் பெண்களின் கவர்ச்சியை அதிகரித்து வெளிக்காட்டலாம். ஆனால் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிய முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

பெரிய மார்பகங்கள் அசிங்கமாக தொங்கி காட்சியளிக்காமல் சிக்கென்று வைத்துக் கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. சில பெண்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள இயற்கை வழிகள் ஏராளமாக உள்ளது.

இங்கு அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும் சில மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் மார்பகங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

தயிர் + முட்டை மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 முட்டையின் வெள்ளை வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலின் எண்ணெயை சேர்த்து கலந்து, மார்பக பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு
1 முட்டையின் வெள்ளைக்கருவுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து, மார்பகங்களில் தடவி நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் தளர்ந்த மார்பகங்கள் இறுக்கமடையும்.

ஆப்பிள் மாஸ்க்
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸில் 1 கப் பால் சேர்த்து கலந்து, மார்பக பகுதியைச் சுற்றி தடவி மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

புளித்த தயிர் மாஸ்க்
நன்கு புளித்த தயிரை 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, அதோடு 1 முட்டையின் மஞ்சள் கரு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, மார்பங்களில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

அன்னாசி மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் அன்னாசி பழ பேஸ்ட்டுடன் 10 துளிகள் திராட்சை விதை எண்ணெய் சேர்த்து கலந்து, மார்பகங்களில் தடவி, பொருத்தமான பிராவை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். பின் திராட்சை விதை எண்ணெயைக் கொண்டு 2 நிமிடம் மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும்.

கேரட் மாஸ்க்
கேரட் ஜூஸை ஐஸ் கட்டிகளாக்கி மார்பகங்களில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய் மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, மார்பகங்களில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

காபி மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் காபி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மார்பக பகுதியில் தடவி ஒரு வெள்ளைத் துணியால் மூடி 1 மணிநேரம் கழித்து, கழுவ வேண்டும்.

ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளை ஒரு வெள்ளை துணியில் வைத்து, மார்பகங்களில் 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.

23 1471935693 1 yogurt

Related posts

இப்படித்தான் பயன்படுத்தணும்! மீசை முடி வளர்ச்சியை குறைக்க..

nathan

கோடைக்காலத்தில் உடல் முழுவதும் பராமரிக்க டிப்ஸ்

nathan

பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும் – தீர்வும்

nathan

ஃபேர்னஸ் க்ரீம் போடுவது சருமத்திற்கு நல்லதா?

nathan

சருமத்தை பாதுகாக்கும் குளிர்கால குறிப்புகள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

பெண்களே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் கவனம் செலுத்துபவரா நீங்கள் ?இதை முயன்று பாருங்கள்..

nathan

அழகை கெடுப்பது போலிருக்கும் மச்சத்தை நீக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

உஷாரா இருங்க…! இந்த அறிகுறிகள் இருக்கா? இதோ எளிய நிவாரணம்…

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை அகற்ற மஞ்சள் கிழங்கு ஆவி பிடிங்க

nathan