30.5 C
Chennai
Friday, Jun 27, 2025
NeqQU8Q
சைவம்

குடைமிளகாய், மிளகு, காளான் துவட்டல்

என்னென்ன தேவை?

குடைமிளகாய் விருப்பமான கலர் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – 2,
காளான் – 1 கப்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
மிளகு – 1½ டீஸ்பூன்,
மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
அலங்கரிக்க – மல்லித்தழை.


எப்படிச் செய்வது?

குடைமிளகாயை சுத்தப்படுத்தி நீளமாக வெட்டவும். அதே போல் தக்காளி, வெங்காயம் எல்லாவற்றையும் வெட்டவும். காளானை மேல் தோல் எடுத்து மண்வாசனை போகும்வரை சுத்தமாக கழுவி அதையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காளான் சேர்த்து வதக்கி இத்துடன் உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் சேர்த்து வதக்கவும். இக்காய்கள் அனைத்தும் சீக்கிரமாக வெந்து விடும். தண்ணீர் தேவையில்லை. நல்ல சுருள வதக்கி இறக்கவும். பிறகு மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். ரொட்டி, நான், சப்பாத்தியுடன் பரிமாறவும்.NeqQU8Q

Related posts

சுவையான புளியோதரை செய்வது எப்படி

nathan

தயிர்சாதம் & ஃப்ரூட்

nathan

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

தேங்காய் பால் காய்கறி குழம்பு

nathan

அல்சரை சரிசெய்யும் மணத்தக்காளி கீரை கூட்டு

nathan

பச்சை பயறு கடையல்

nathan

சோயா உருண்டை குழம்பு

nathan

வேர்க்கடலை புளிக்குழம்பு

nathan

பனீர் 65 | Paneer 65

nathan