f4SpKYS
தலைமுடி சிகிச்சை

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயச்சாறு

தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது எனலாம். இதற்கு காரணம் வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப் பொருள்தான். வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. முடி வளர கைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தி சோதனை செய்வதை விட்டு வெங்காயச் சாற்றை பயன்படுத்துவது பக்கவிளைவை ஏற்படுத்தாத ஒரு வழிமுறையாகும்.

வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும். கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் வெங்காயச் சாறு கலந்தும் தலையில் தடவலாம். சூடு ஆறியபின்னர் வெங்காய சாறு கலந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி தலை குளித்து வந்தால் தலைமுடி வேரை வலுப்படுத்தி வளர்ச்சியடையச் செய்கிறது. இதே போல தேனுடன் வெங்காயச் சாறு கலந்தும் தலைமுடிக்கு தடவலாம். 2

வாரங்களில் முடி உதிர்வது குறைந்து 4 வாரத்தில் புதிதாக முடி வளரும். ஆலிவ் எண்ணையை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்f4SpKYS

Related posts

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுப் பிரச்சனை போயே போச்சு!

nathan

ஆரோக்கியமான கூந்தல் பெற:

nathan

தலைமுடி காக்கும் இயற்கையான வழிகள்!

nathan

கூந்தல் 1 அடிக்கு மேல வளர மாட்டேங்குதா? இதை ட்ரை பண்ணுங்க !!

nathan

உங்க முடியின் அடர்த்தி குறைகிறதா

nathan

சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும் தெரியுமா!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

கூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா?

nathan