28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
finance manager girl 11
சரும பராமரிப்பு

பெண்களுக்கான தினமும் செய்யக்கூடிய சில சிம்பிள் பியூட்டி டிப்ஸ்

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின் மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா?

தண்ணீர் மருந்து ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சனை அவ்வளவாக வருவதில்லை!

வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு “லெமன் பாத்’ எடுங்கள். இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பொலிவுடன் இருக்கும். finance manager girl 11

Related posts

தோல் பளபளக்க…

nathan

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்.—-அழகு குறிப்புகள்

nathan

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

nathan

சருமமும் தலைமுடியும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க நீங்க ‘இத செஞ்சா போதுமாம்…!

nathan

முதுகு கருமையை போக்கும் ஆலிவ் ஆயில் மசாஜ்

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…

sangika