28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
8 300x203 1
தலைமுடி சிகிச்சை

இளநரைக்கான வீட்டு சிகிச்சை

நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா 10 கிராம்- இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்கவைக்கவும். இந்தக் கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரியக் கதிர்கள் பட்டு எண்ணெயில் சாரம் இறங்கும். பின்பு வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் தலையில் தேய்த்து வந்தால் நரை குறையும். செம்பட்டை முடி கருமையாகும்.

செம்பருத்தி பூ, அவுரி விதை, நெல்லி முள்ளி (காயவைத்த நெல்லிக்காய்) மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரைமுடிக்குத் தேவையான அளவு அந்தக் கலவையைத் தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.

பூந்திக்காய், வெந்தயம், வேப்பிலை, ரோஜா இதழ், ஆரஞ்சுப் பழத்தோல், மல்லிகைப் பூ, வெட்டிவேர், செண்பக மொட்டு, நெல்லிக்காய் எல்லாம் சேர்த்து 100 கிராம் எடுத்துக் கொள்ளவும். எல்லாப் பொருட்களையும் காய வைத்து, அரைக்கவும். 100 கிராம் பொடியை 200 மி.லி. தயிரில் கலந்து கொள்ளவும். முதலில் தலையில் சிறிது நல்லெண்ணெய் தடவவும். பிறகு இந்த ஹேர் பேக்கை தடவி, 45 நிமிடங்கள் ஊற வைத்து அலசவும். இந்த பேக், இளநரை வராமல் தடுப்பதோடு, முடி உதிர்வையும் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு நல்ல பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் தரும்.

50 கிராம் அளவுக்கு மருதாணிப் பொடியில் ஒரு முட்டை, 5 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் தயிர், 2 டேபிள்ஸ்பூன் காபி (சிக்கரி கலக்காதது) அல்லது டீ டிகாக்‌ஷன், எலுமிச்சைச்சாறு 5 முதல் 8 சொட்டு, தேவைக்கேற்ப வெதுவெதுப்பான நீர் சேர்க்கவும். இவற்றை ஒரு இரும்பு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். தலையில் ஆயில் மசாஜ் செய்த பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து எல்லா பக்கமும் பரவும்படி இதைத் தடவிக் கொண்டை போடவும். வெறும் பளபளப்பு மட்டும் வேண்டுமானால், அரை மணி நேரத்தில் குளிக்கவும். கலர் வேண்டுமானால் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கவும். சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதை தவிர்க்கலாம்.8

Related posts

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே முடி கிடு கிடுனு வளர இதை தடவுங்க…

nathan

முடி நன்கு வளர

nathan

கூந்தல் பராமரிப்பு

nathan

ஆண்களை முடி உதிர்வது இருந்து விடுபட உதவும் உணவு வகைகள்!

nathan

அடர்த்தியான, நீளமான முடியை பெற என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது!

nathan

தலைமுடி பிரச்சனைகள் உடல் ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

க்ரே முடியை இயற்கையாகவே கருமையாக்க உதவும் 5 கருப்பு தேநீர் ரெசிப்பி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

nathan

உறுதியான தலை முடிக்கு……

nathan