பாதாம் எண்ணெய் மிகவும் மென்மையான சென்ஸிடிவான சருமத்திற்கு ஏற்றது. அதிலுள்ள சத்துக்கள் சருமத்தை மின்னச் செய்யும். சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மற்றும் வறட்சி ஆகியவற்றை போக்கி சருமத்தை மிருதுவாக்குகிறது. இதனைக் கொண்டு எப்படி உங்களை அழகு படுத்தலாம் என பார்க்கலாம்.
பாதாம் மற்றும் தேன் : இது சருமத்தை கண்ணாடி போன்று மினிமினுக்க வைக்கும் தேன் மற்றும் பாதாமை சம அளவு எடுத்து கழுத்து, முகம் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இப்படி செய்தால் சருமம் பளபளக்கும்.
பாதாம் மற்றும் பால் : உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை களைந்து நிறத்தை அதிகரிக்கும். பாதாம் என்ணெய் 1 ஸ்பூன் எடுத்து அதில் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் விட்டு கலக்கி முகத்தில் தடவுங்கள் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். முகம் பளிச்சென்று இருக்கும்.
பாதாம் எண்ணெய் மற்றும் விட்டமின் ஈ : உங்கள் முகத்தில் சுருக்கங்கள் சற்றே காட்டமாக இருக்கிறதா? இது சிறந்த வழியாக இருக்கும். பாதாம் எண்ணெயை சில துளி எடுத்து இரண்டு டீ ஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெயை எடுத்து கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் குறிப்பாக கண்களுக்கு அடியில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :
இந்த குறிப்பு முகப்பரு, எண்ணெய் சருமம் மற்றும் கரும்புள்ளிகளுக்கு நல்ல பலனைத் தரும். இரண்டையும் சம அளவு எடுத்து கலக்கி முகத்தில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.