24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201612241518550064 Christmas Special jeera Samba rice mutton biryani SECVPF
அசைவ வகைகள்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சீரக சம்பா மட்டன் பிரியாணி

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்வது வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சீரக சம்பா மட்டன் பிரியாணி
தேவையான பொருள்கள் :

சீரக சம்பா அரிசி – 4 கப்
மட்டன் – அரை கிலோ
இஞ்சி, பூண்டு – 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 4
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் – ஒரு மூடி
தயிர் – அரை கப்
லெமன் – 1
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு
நெய் – அரை கப்
எண்ணெய் – அரை கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கிராம்பு – 3
பட்டை – 3 சிறிய துண்டு
ஏலக்காய் – 3
பிரிஞ்சி இலை – ஒன்று
சோம்பு – ஒரு ஸ்பூன்

செய்முறை :

* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

* அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப,.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

* ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

* பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

* சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார். 201612241518550064 Christmas Special jeera Samba rice mutton biryani SECVPF

Related posts

ஆந்திரா சிக்கன் குழம்பு

nathan

இறால் பெப்பர் ப்ரை

nathan

சுவையான சிக்கன் ப்ரை ரெசிபி

nathan

ஸ்பெஷல் பிரியாணி!!

nathan

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

nathan

ஃபிங்கர் சிக்கன் (finger chicken)

nathan

தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்

nathan

சூப்பர்” இறால் ப்ரை”

nathan

சில்லி பன்னீர் எவ்வாறு செய்வது?

nathan