26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
paneer 65 20 1466423615
அசைவ வகைகள்

ருசியான… பன்னீர் 65

சிக்கன் 65, கோபி 65 பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பன்னீர் 65 கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும். இன்று மாலை நீங்கள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து சுவைக்க நினைத்தால், பன்னீர் 65 செய்து சுவையுங்கள்.

இங்கு பன்னீர் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பன்னீர் – 200 கிராம் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

மாவிற்கு… மைதா – 1 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: முதலில் பன்னீரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த மாவில் பன்னீர் துண்டுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பன்னீர் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் 65 ரெடி!!!

paneer 65 20 1466423615

Related posts

டின் மீன் கறி

nathan

இறால் பிரியாணி

nathan

முட்டை மலாய் குருமா… எப்படி செய்வது தெரியுமா?

nathan

இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan

வாழைப்பழ முட்டை தோசை

nathan

சிக்கன் கிரேவி / Chicken Gravy

nathan

சூப்பர் ஆட்டுக்கால் மிளகு குழம்பு : செய்முறைகளுடன்…!

nathan

இறால் தொக்கு

nathan

சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்…!​

nathan