கோவைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் கோவைக்காயை இவ்வாறு வறுவல் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
காரசாரமான கோவைக்காய் வறுவல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
கோவைக்காய் – கால் கிலோ
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப,
சீரகக்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* கோவைக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* நறுக்கிய கோவைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி 15 நிமிடம் வைக்கவும்.
* அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
* சூப்பரான கோவைக்காய் வறுவல் ரெடி.
* இதை தயிர்சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
* இந்த வறுவல் செய்ய எண்ணெய் சற்று தாளாரமாக விட்டால் சூப்பரான இருக்கும்.